மகளிர் உரிமைத் தொகை.. ஆண்களுக்கும் ரூ.12,000 போட்டுவிடுங்க.. ஸ்டாலின் அறிவிப்பால் தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடைக் கால சிறப்பு தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என்று மொத்தமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் இந்த அதிரடி நடவடிக்கையை வைத்து சோசியல் மீடியாவில் ஜாலியான மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளன. அதுதொடர்பாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு மகளிர் உரிமை தொகையாக ரூ.12 ஆயிரம் அளிக்கப்பட்டு வருகிறது. அப்படியே இதனை 2046ஆம் ஆண்டுக்கு திருப்பினால், மகளிர் உரிமைத் தொகையாக ரூ.10 ஆயிரம் அளிக்கப்படும் என்றும், ஐடி நிறுவனங்களில் ஆரம்பக் கட்டத் தொகையாக ரூ.9 ஆயிரம் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டதோடு, தமிழக அரசின் இந்த நடவடிக்கையாக பில்கேட்ஸ், சத்யம் நாடெல்லா, சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் பயப்படுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

தூள் படத்தில் ரீமா சென்னுக்கு காதல் இல்லை என்பதை அறிந்து விவேக் வருத்தப்பட, உடனிருக்கும் மயில்சாமி, "சட்டை கிழிந்திருந்தால் தைச்சு முடிச்சிரலாம்.. நெஞ்சி கிழிஞ்சிடுச்சு.. எங்க முறையிடலாம்" என்று பாடுவார்.. அதில் வரும் விவேக்காக எடப்பாடி பழனிசாமியையும், மயில்சாமியாக சவுக்கு சங்கரையும் மாற்றி, "என்ன சித்தப்பூ இப்டி விடிஞ்சும் விடியாமலும் நெஞ்சுல குண்ட தூக்கி போட்டுட்டாய்ங்க" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிகிட்டீங்க பங்கு ரகம்.

அசுரன் படத்தில் பசுபதி, "என் மருமகன் இறந்துட்டான்.. நீ நம்பலைனாலும் அதுதான் நெசம்" என்று கூறுவார்.. அதனை அப்படியே மாற்றி, "2026.. ஆக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.. நீங்க ஒத்துகிட மனசு இல்லனாலும் இதான் நெசம்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் நம்பிக்கை தான் சார் எல்லாம் ரகம்.

சிவாஜி படத்தில் ரஜினிகாந்த், "பாண்ட்ஸ், டாலர்ஸ், கருப்புப் பணம், பினாமி உள்ளிட்ட சொத்துகளில் எனக்கு 50%.. இல்லைனா சிபிஐ, விசாரணை, வருமான வரித்துறை ரெய்டு.. போட்டுக் கொடுத்ததுக்கு எனக்கு எப்படி பார்த்தாலும் 20% லாபம்.. பேரை கேட்ட உடனே சும்மா அதிருதுல" என்பார். அதனை அப்படியே மாற்றி, தேர்தல்ல திருட்டுத்தனம் பன்னலாம்னு முதல் phaseல தேர்தல் நடத்தினா இந்த ரூ.5 ஆயிரம் effect வெச்சி செய்யும்.. இந்த ரூ.5000க்கு பயந்து கடைசி Phaseல தேர்தல் நடத்தினா இரண்டே நாள்ல ரிசல்ட் அறிவிக்கனும்.. தேர்தல்ல தில்லுமுல்லு பன்ன முடியாது.. எப்படி பார்த்தாலும் திமுகவிற்கு தான் இது சக்சஸ் என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் ரகம்.

சூர்யவம்சம் படத்தில் சரத் குமாரும், மணிவண்ணனும் நியூஸ்பேப்பரை வைத்து முகத்தை மறைத்துக் கொள்வார்கள். அதுபோல் முகத்தை மூடிக்கொண்டு ஆண்களும், "ஆண்கள் இனத்துக்கும் எதுனா ரூ.10 ஆயிரம், ரூ.12 ஆயிரம் சிறப்புத்தொகை போட்டுவிடுங்க ஐயா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒவ்வொரு ஆணின் மனசாட்சி.


-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications