மாடு பிடிமாடு.. அப்படியே தீபக் ஹூடாவ பார்த்த மாதிரியே.. சிஎஸ்கே அணியை வெளுக்கும் மீம்ஸ்!
சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அடைந்த தோல்விகளை வைத்தும், வீரர்களின் ஆட்டம் குறித்தும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
தாய் கிழவி படத்தில் மருமகனாக வரும் முத்துக் குமார், நகையை அடமானம் வைத்து சாப்பிட்டு கொண்டிருக்கும் முனீஷ் காந்தை கண்டுபிடித்து, மாடு.. பிடிமாடு என்று கூறுவார். அதனை அப்படியே, சிவம் துபே மற்றும் ரோகித் சர்மாவையும் ஒப்பிட்டுள்ளனர். "சிவம் துபே நம்ம ரோகித் சர்மா மாதிரி தான் போல.. இந்திய அணிக்கு நல்லா ஆடிட்டு ஐபிஎல்னு வந்துட்டா ஸ்கேம் பண்றான்" என்று கூறிவிட்டு, மாடு.. பிடிமாடு என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு ரகம்.

சிஎஸ்கே அணி ரசிகர்கள் டேரல் மிட்சலை கடந்து இன்னொரு கொடூரமான வீரரை கனவிலும் பார்க்க முடியாது என்று நினைத்திருந்தனர். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் மேத்யூ ஷார்ட் ஆடிய ஆட்டம் மிட்சலையும் மிஞ்சிவிட்டது. இதனை வைத்து பிளமிங், இந்தா கிளியர் பண்ணிருவோம் என்று சொல்லிவிட்டு மேத்யூ ஷார்ட்டை இறக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கொடுமையிலும் கொடுமை ரகம்.

வடசென்னை படத்தில் தனுஷை பார்த்து ஆண்ட்ரியா, "நீ பேசுனதெல்லாம் இங்க இன்னொருத்தர் பேசினாரு.. அவர பண்ணங்கனு உனக்கு தெரியுமா" என்று கேட்பார். அபிஷேக் சர்மாவுக்கு சரியாக டிஆர்எஸ் எடுத்து சஞ்சு சாம்சனை தனுஷாகவும், தோனியை ராஜனாகவும் மாற்றி உருவாக்கியுள்ள மீம் இது என்னோட டீம்.. நான்தான் சண்டை செய்வேன் ரகம்.

தெறி படத்தில் காளி வெங்கட், "சார் ஏசி வந்திருக்காரு சார்.. என்று சொல்வார். அதற்கு வேறு பெயரை கூறும் இன்ஸ்பெக்டர், சார் ஏசி விஜய் குமார் வந்திருக்காரு சார்" என்று மிரள்வார். அதனை அப்படியே மாற்றி, சார் சிஎஸ்கே அணியில் ஸ்டார்க் வந்திருக்காரு சார் எப்/ர்ய் சிக்க,, அதற்கு மிட்சல் ஸ்டார்க்கா என்று கேட்க, அதற்கு முகேஷ் ஸ்டார்க் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வந்துட்டான்டா சிங்கக்குட்டி ரகம்.














Click it and Unblock the Notifications