"விதியுடன் மோது.. ஆனால் விசிலுடன் மோதாதே" இஷான் கிஷனை வச்சு செய்யும் சிஎஸ்கே ரசிகர்களின் மீம்ஸ்!
மும்பை: ஐதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் ஐதராபாத் அணி தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில், அந்த அணியை கிண்டல் செய்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
வீரம் படத்தில் தம்பி ராமையாவை சந்தானம் கேங் அடிக்கும் போது, என்ன சுருளி சார்.. எங்களை ஹீரோவாகி அடிக்க போறேன்னு சொல்லிட்டு, இப்படி சாக்கு மூட்டைக்கு கீழ படுத்துட்டு இருக்கீங்க என்று கிண்டல் செய்வார். அதில் வரும் தம்பி ராமையாவாக இஷான் கிஷனையும், சந்தானமாக சிஎஸ்கே அணியையும் மாற்றி, என்ன சார்.. எங்களை வீட்டுக்கு போக சொல்லிட்டு இப்போ எங்களுக்கு முன்னாடி வந்து வீட்டுக்குள்ள படுத்திட்டு இருக்கீங்க என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டியா.. வெளிய வா ரகம்.

மாஸ்டர் படத்தில் சிறையில் உள்ள சிறுவன் ஒருவனுக்கு விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே முடியை வெட்டிவிடுவார்.. அதில் வரும் விஜய்யாக சிஎஸ்கே அணியையும், சிறுவனாக இஷான் கிஷனையும் மாற்றி, "விதியுடன் மோது.. ஆனால் விசிலுடன் மோதாதே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எங்க வந்து யாருக்கிட்ட சீன் போடுற ரகம்.

வல்லவன் படத்தில் ரீமா சென்னிடம் சிம்பு, "இப்போ கால்லை தூக்குடி.. தூக்குடி" என்று மிரட்டுனார். அதில் வரும் ரீமா சென்னாக டிராவிஸ் ஹெட் மற்றும் இஷான் கிஷன் இருவரும் விசில் ஊதுவதாகவும், சிம்புவாக சிஎஸ்கே அணியையும் மாற்றி, "இப்போ ஊதுடா விசில" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் லெப்ட்ல விட்ட ரைட்ல திரும்பி இருக்கும் ரகம்.

கில்லி படத்தில் விஜய் மற்றும் திரிஷாவை பிடிக்கும் பிரகாஷ்ராஜ், டேய்.. யாருடா நீ.. இது முத்துப்பாண்டி கோட்டைடி.. என்று சொல்வார். அதில் வரும் பிரகாஷ்ராஜ்ஜாக கிறிஸ் கெய்ல்லையும், விஜய்யாக வைபவ் சூர்யவன்ஷியையும் மாற்றி, "டேய் யார்ரா நீ.. இந்த ஐபிஎல்க்கு மட்டுமல்ல.. மொத்த லீக்குக்கும் யுனிவர்சல் பாஸ்டா நான்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பாஸ் பேபி ரகம்.

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, "உங்களுக்கு 2 நிமிஷம் டைம் தரேன்.. அதுக்குள்ள என்னைய கொன்னுட்டு பணத்தை எடுத்துக்கோங்க.. இல்லனா நான் உங்களை கொன்றுவேன்" என்பார். அதில் வரும் விஜய் சேதுபதியாக வைபவ் சூர்யவன்ஷியை மாற்றி, "பவர்பிளே குள்ள என் விக்கெட்டை எடுத்துரு.. அப்படி இல்லனா 20 ஒவரும் எனக்கு பவர்பிளே தான்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ் ரகம்.

-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications