ஆர்க்ல போட்டா பார்க்ல அடிப்பான்டா இந்த ஆறுச்சாமி.. சிவம் துபேவை கொண்டாடும் தரமான மீம்ஸ்!
அகமதாபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய சிவம் துபே 31 பந்துகளில் 66 ரன்களையும், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். இதனை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
ஆறு படத்தில் வில்லன் விஸ்வநாதனிடம் பேசும் சூர்யா, "ஹேய்.. இந்த உளுந்துலாம் இங்க மாவு ஆகாது" என்று சொல்வார். அதில் வரும் வில்லனாக பவுலர்களையும், ஹீரோ சூர்யாவாக சிவம் துபேவையும் மாற்றி, "ஆர்க்ல போட்டா பார்க்ல அடிப்பான்டா இந்த ஆறு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ் ரகம்.

தென்னவன் படத்தில் விவேக்கிடம் அவரின் தாத்தா இறக்கும் போது, "நீ பெரிய தாதா ஆகணும்" என்று சத்தியம் பெற்றுவிடுவார்.. அதுபோல் இந்திய அணியில் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் சிறப்பாக ஆடி ஆட்டநாயகன் விருதை கைப்பற்றி வருகின்றனர். அதில் தாத்தாவாக யுவராஜ் சிங்கையும், விவேக்காக அபிஷேக் சர்மாவையும் மாற்றி, நீதான் அடுத்து பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வாங்கணும் என்று சத்தியம் வாங்குவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நடக்குறதா பேசுங்க தம்பி ரகம்.

களவாணி படத்தில் நாயகியின் அண்ணன், உள்ள அந்தப் புள்ள என்ன பண்ணுதுனு பாரு என்றார். அதில் வரும் நாயகியின் அண்ணனாக கவுதம் கம்பீரை மாற்றி அபிஷேக் சர்மா டக் அவுட்டாகியதால், "உள்ள டிரஸ்ஸிங் ரூமில் சஞ்சு சாம்சன் டான்ஸ் ஆடுறானானு பாரு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

டி20 உலகக்கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா 3 இன்னிங்ஸில் விளையாடி இதுவரை ஒரு போட்டியில் கூட ரன் அடிக்கவில்லை. 3 போட்டிகளிலும் டக் அவுட்டாகி வெளியேறி வருகிறார். இதனால் அபிஷேக் சர்மா டக் அவுட்டாவதற்கு சஞ்சு சாம்சனை சூனியக்காரராக மாற்றி, சூனியம் வைப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்றா சக்க ரகம்.

-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications