லைவ் கட்டானது ஏன்? சட்டசபையில் அசையாமல் அமர்ந்திருந்த விஜய்.. வச்சு செய்யும் திமுக.. தரமான மீம்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை 2வது நாள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், முதல்வர் விஜய் எந்த கேள்விக்குள் பதில் அளிக்காமல் அமைதி காத்துள்ளார். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, தவெக வாக்குறுதிகள் உள்ளிட்டவை குறித்து திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் சட்டசபை நேரலை கட் செய்யப்பட்டது. இதனை வைத்து திமுகவினர் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

memes

கோரிப்பாளையம் படத்தில் ரிட்டையர்ட் ரவுடியாக வரும் மயில்சாடி மாமும் கேட்கும் போது, ஒரு ஆல்பத்தை எதற்கெடுத்தாலும் காட்டுவார்.. நான் யார் தெரியுமா என்று.. அதில் வரும் மயில்சாமியாக ஆதவ் அர்ஜுனாவை மாற்றி, சட்டசபையில் எந்த நியாயமான கேள்வி கேட்டாலும், கொளத்தூரில் என்ன நடந்தது தெரியுமா என்று நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜுனா கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ரெக்கார்டை மாத்துங்கடா ரகம்.

memes

போக்கி படத்தில் லிஃப்டில் மாட்டிக் கொள்ளும் விஜய், என்னடா ஒன் ஹவர் ஆகுமா என்று ஸ்ரீமனிடம் கேட்பார். அதற்கு ஸ்ரீமன், புரிஞ்சு போச்சு.. ஒன் ஹவரா மாத்திறோம் என்பார். அதுபோல் முதல்வர் விஜய் என்னடா தமிழ்நாடு கடன் 10 லட்சம் கோடியா இருக்கா என்று கேட்பதாகவும், அதற்கு விர்ச்சுவல் வாரியர்ஸ், "தேர்தல் வாக்குறுதிக்கு நாமம்.. புரிஞ்ச் போச்சு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் ரகம்.

memes

நானும் ரவுடி தான் படத்தில் ஆனந்த்ராஜிடம் இருக்கும் அடியாள் ஒருவர் வியாதியால் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு முறைத்தவாறு இருப்பார். அந்த நபரால் அசைய கூட முடியாது. அதுபோல் சட்டசபைக்கு வந்தால் மட்டும் விஜய்யால் பேச முடியவில்லை.. அசைய முடியவில்லை என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் கொடுமையிலும் கொடுமை ரகம்.

memes

படிக்காதவன் படத்தில் விவேக்கிடம் தனுஷ், அவங்க கேட்டதுக்கும், நீங்க சொன்னதுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா என்று கேட்பார். அதற்கு விவேக், பஞ்ச் நல்லா இருக்கானு தான் பார்க்கணும்.. இதை எழுதி மனப்பாடம் செய்ய நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா என்பார். அதுபோல் திமுக சட்டம் ஒழுங்கு பத்தில் கேட்டதுக்கும் நீங்க ஸ்டாலின் தோல்வி பற்றி சொன்னதுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்பதாகவும், அதற்கு ஆதவ், ரேஜ்பைட் நல்லா இருந்துச்சானு மட்டும் பார்க்கணும்.. அதைவிட்டுட்டு கிராஸ் கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இவர் தான் கேங் லீடர் ரகம்.

memes

சோசியல் மீடியாவில் தவெக ஆதரவாளர் ஒருவர், உதயநிதிலாம் ஒரு ஆளுனு அவருக்கு முதல்வர் விஜய் பதில் சொல்லணுமா என்று ஆதவ் அர்ஜுனா கேட்பதாக பதிவிட்டிருந்தார். அதற்கு திமுக ஆதரவாளர்கள், ஏன் லைவ் கட் பண்ணப்பட்டது என்று யோசித்தாலே யார் யாரை பொளக்குறாங்கனு தெரிந்து இருக்கும் என்று சொல்லும் ஸ்க்ரீன்ஷாட் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு ரகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+