1 வயசு குழந்தைக்கு மாத்திரைலாம் கொடுக்க மாட்டாங்க.. அமைச்சர் கில்லி சரத் வீடியோ.. தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை: சில ஆண்டுகளுக்கு முன் சேப்பாக்கம் மைதானத்தில் அமைச்சர் சரத்குமார் தனது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் திமுகவினர் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

தவசி படத்தில் ஒரு பைத்தியத்திடம் சிக்கி கொள்ளும் வடிவேலு, ஒரு கட்டத்தில் நான் பைத்தியன் தான்.. நான் பைத்தியம் தான் என்று சிக்கி கொள்வார். இதனை ஒப்புக் கொள்வதற்கு முன் வடிவேலு கொடுக்கும் ரியாக்சன் இன்றும் பிரபலம். அதில் வரும் வடிவேலுவாக முதல்வர் விஜய்யை மாற்றி, போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக 3 கிமீ ஓடிட்டு வந்துருக்கேன்.. என்று சொல்லும் போது, அமைச்சர் கில்லி சரத்தின் பைடர் வீடியோ லீக்கானதை பார்த்து கொடுக்கும் ரியாக்சனாக வடிவேலு ரியாக்சன் இருப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அடப்பாவிகளா ரகம்.

இங்கிலிஷ்காரன் படத்தில் பாவா லட்சுமணன் வடிவேலுவிடம், என்ன பாஸ் இது.. ஒரு மணி நேரமா எங்க அக்காவுக்கு டிரை பண்றேன்.. போகவே மாட்டுது என்பார். அதனால் அதிர்ச்சி அடையும் வடிவேலு, நம்ம இந்தப் பக்கம் போக வேண்டாம்.. என்று மாறி செல்வார். அதில் வரும் வடிவேலுவாக திமுகவினரை மாற்றி, 1 வயசு குழந்தைக்கு மாத்திரைலாம் கொடுக்க மாட்டாங்க.. டானிக் தான் கொடுப்பாங்க என்று சொல்வதாகவும், அதற்கு பாவா லட்சுமணன், இந்த பண்ணையார்தன பேச்சுக்கு தான்டா நீங்க கூப்புல இருக்கிங்க என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல ரகம்.

ஷாஜகான் படத்தில் வரும் சாப்ளின், விவேக் வீட்டின் கரண்ட்டை கட் செய்துவிட்டு, "ஃபர்ஸ்ட் நைட்டா கேட்கிற.. இனி இதுதான்டா உனக்கு கடைசி நைட்" என்பார். அதில் வரும் சாப்ளினாக தவெகவினரை மாற்றி, "மாற்றமாடா கேட்டீங்க.. இனிமே உங்களுக்கு விடியலே கிடையாதுடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் ரகம்.

அமைச்சர் கில்லி சரத் வெளியிட்டுள்ள வீடியோவை பகிர்ந்து ஒருவர், அண்ணா காமராஜரையே அவதூறு பேசின கட்சி அண்ண.. நீங்க கவலைப்படாதீங்க.. எப்போதும் உங்களோடு இருப்போம் என்று பதிவிட்டுள்ளார். அதற்கு ஒரு திமுக ஆதரவாளர், நாம் இந்த கேஸ்லலாம் மாட்ல மேடம், இப்படிக்கு காமராஜர் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எங்கிட்டு போனாலும் கேட் போட்டுறாங்களே ரகம்.












Click it and Unblock the Notifications