"என்னடா 260 ரன்களை சேஸ் பண்றீங்க" ஸ்ரேயாஸ் ஐயரால் பதற்றம் அடைந்த சிஎஸ்கே.. தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை: நேற்று நடந்த 2 ஐபிஎல் போட்டிகளிலும் சேர்த்து 900 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டன. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்த போட்டி என்பதால், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இதுதொடர்பாக சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.
நானும் ரவுடிதான் திரைப்படத்தில் பாம் போட்ட பின், அங்கு ஒழிந்திருக்கும் ஆனந்த்ராஜ், "என்னடா பாம்லாம் போடுறீங்க" என்று சொல்வார். அதுபோல் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி 265 ரன்களை சேஸ் செய்து டெல்லி அணியை வீழ்த்தியது. அதில் வரும் ஆனந்த்ராஜாக சிஎஸ்கே அணியை மாற்றி, "என்னங்கடா 260லாம் சேஸ் பண்றீங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகனின் மனக்குமுறல்.

அந்நியன் திரைப்படத்தில் தங்கையை பறிகொடுத்த சிறுவன், "இவங்களையெல்லாம் ஒன்றுமே பண்ண முடியாதா" என்று அழுது கொண்டே பாட்டியிடம் கேட்பார். அதில் வரும் பாட்டியாக ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணியையும், வில்லனாக பஞ்சாப் அணியையும், சிறுவனாக டெல்லி அணியையும் மாற்றி, இவங்களை எல்லா ஒன்னும் பண்ண முடியாதா என்று அழுது கொண்டே கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அவனை யாராச்சும் நிறுத்துங்களேன்டா ரகம்.

மருதமலை படத்தில் குள்ளமான திருடன் ஒருவரை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லும் வடிவேலு, ஒரு கட்டத்தில் கண்ணீர்விட்டு ஆறுதல் கூறுவார். நேற்றைய ஆட்டத்தில் கேஎல் ராகுல், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் சதம் அடித்த போதும், அந்த அணிகள் வெற்றி பெறவில்லை. இதனால் வடிவேலுவாக கேஎல் ராகுலையும், அந்த குள்ளமான திருடனாக வைபவ் சூர்யவன்ஷியையும் மாற்றி ஆறுதல் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோதனை மேல் சோதனை ரகம்.

கண்ணும் கண்ணும் படத்தில் கிணத்த காணோம் என்று வடிவேலு செய்யும் அலப்பறையில் அந்த காவல் அதிகாரி வேலையை விட்டே செல்கிறேன் என்று ஓடிவிடுவார். அப்போது, இனிமே நீங்கள் இருக்கும் ஊரில் நான் இருக்க மாட்டேன் என்று சொல்லி செல்வார். அதுபோல் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் ஆட்டத்தை பார்த்து, சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் ஓடுவதாக மீம் உருவாக்கப்பட்டுள்ளது. காவல் அதிகாரியை சிஎஸ்கே, மும்பை அணியாக மாற்றி," இனிமேல் நீங்க இருக்குற ஊர்ல நான் இருக்க மாட்டேன்டா.. நான் போறேன்டா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் ரகம்.


-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications