சிஎஸ்கேவை பிளே ஆஃப் அனுப்ப தீவிரமா இருக்காங்களே.. உதவி செய்த ஆர்சிபி, டெல்லி.. தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக ஆர்சிபி, மும்பை, டெல்லி உள்ளிட்ட அணிகள் விளையாடி வருகிறது. ஆனால் சிஎஸ்கே அணி அடுத்த 2 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
எம் மகன் படத்தில் கிழவனின் சாவுக்காக காத்திருக்கும் அவரின் மனைவி, "என்னடி இது.. போகவும் மாட்டிகிது.. வரவும் மாட்டிகிது.. இப்படியே இழுத்துட்டே இருக்குது" என்பார். அதில் வரும் கிழவனாக ஐபிஎல் தொடரின் பிளே ஆஃபையும், கிழவியாக ராஸ்தான் அணியையும், அவரின் மகள்மகளாக ஐதராபாத் மற்றும் சிஎஸ்கே அணியையும் மாற்றி, "என்னடி இது.. பிளே ஆஃப் போக முடியல.. எலிமினேட்டும் ஆக முடியல" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கால காலத்துல முடிச்சு விடுங்கய்யா ரகம்.

சீனா தானா 007 படத்தில் வடிவேலு சிங்கமுத்துவிடம், "ஊருக்கு வருவேன்னு தகவல் சொல்லலை.. ஊருக்கு போகாதது பற்றி நானே அவ்வளவு கவலைப்படலை.. நீங்க ஏன் சார் கவலைப்படுறீங்க" என்பார். அதில் வரும் வடிவேலுவாக சிஎஸ்கே அணியையும், சிங்கமுத்துவாக மற்ற அணிகளையும் மாற்றி, "நாங்களே இந்த சீசன் வேணாம்னு கிவ் அப் பண்ணிட்டோம்.. நீங்க ஏன் சார் பிளே ஆஃப் போக சொல்லி எங்களை டார்ச்சர் பண்றீங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு ரகம்.

12பி படத்தில் பேருந்தை தள்ள பலரும் முயற்சிக்கும் போது ஒருவர் மட்டும், தள்ளு.. தள்ளு.. தள்ளு.. தள்ளு என்பார். அதனை பார்க்கும் வடிவேலு, சடாரென அவரை அறைந்துவிடுவார். அதில் தள்ளு தள்ளு என்று சொல்பவராக சிஎஸ்கே அணியையும், பேருந்தை தள்ளும் நபர்களாக கேகேஆர், மும்பை, டைட்டன்ஸ், டெல்லி அணிகளையும் மாற்றி, சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல மற்ற அணிகள் உதவுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் திருத்த முடியாதுடா.. இவங்களை திருத்தவே முடியாது ரகம்.

கடைக்குட்டி சிங்கம் படத்தில் இளவரசு குடும்பத்தோடு கிணற்றில் விழுந்து சாகப் போகிறோம் என்று சொல்ல, அதற்கு சரவணன் கிணற்றில் தண்ணி இல்லடா என்பார். அதில் வரும் ஆர்சிபி அணியாக இளவரசையும், சிஎஸ்கே அணியாக சரவணனையும் மாற்றி, "சிஎஸ்கே தலையெழுத்து எங்க கைல.. நாங்க ஜெயிச்சா தான் நீங்க பிளே ஆஃப் போவிங்க" என்று சொல்வதாகவும், அதற்கு சிஎஸ்கே, "எவன் ஜெயிச்சாலும் நாங்க மொத ஜெயிக்கணும்டா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒவ்வொரு ரசிகனின் குரல்.

-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications