அன்று சச்சினுடன் போட்டி.. இன்று சூர்யவன்ஷியுடன் போட்டி.. ஆரஞ்ச் கேப் வென்ற விராட் கோலியின் மீம்ஸ்!
பெங்களூர்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. லீக் சுற்றில் பெங்களூர் மண்ணில் விளையாடப்படும் கடைசி போட்டி என்பதால், சின்னசாமி மைதானம் தங்களின் கோட்டையாக மாற்றிவிட்டதாக ஆர்சிபி ரசிகர்கள் மீம்ஸ் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
சென்னை 28 படத்தில் சிறுவர்களுடன் சிவா பேட்டிங் ஆடும் போது, மச்சி.. பின்னாடியே 4 பேர் நிக்கிறாங்கடா என்று கிண்டல் செய்வார். அதில் வரும் சிவாவாக ஆர்சிபி அணியையும், ஃபீல்டிங் நிற்கும் கேப்டனாக குஜராத் அணியையும் மாற்றி, "மச்சி.. 220 ரன்களுக்கும் குறைவாக டார்கெட் கொடுக்குறாங்கடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பாவம் சின்னப்பசங்க ரகம்.

தமிழன் படத்தில் விஜய்யை பார்த்து டெல்லி கணேஷ், "ஜட்ஜ்ஜே நம்மள பார்த்து மிரள்வாரு.. இவன் யாரு.. சுண்டைக்காய் பையன்" என்பார். அதில் வரும் டெல்லி கணேஷை ஆர்சிபி அணியாக மாற்றி, ஆண்டைஸ் சிஎஸ்கே, மும்பை அணியே அடி வாங்குனாங்க.. இவங்க யாரு சுண்டைக்காய் டீம் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆர்சிபினா யாரு தெரியுமா ரகம்.

இனிமே இப்படிதான் படத்தில் வரும் பெப்சி விஜயன், "ஏமாத்துறவங்களை பார்த்தாலே ஒரு வெறி வருது சார்" என்பார். அதில் வரும் பெப்சி விஜயனாக ஆர்சிபி அணியின் விராட் கோலியை மாற்றி, "டீம்-க்காக சேஸ் பண்ணி முடிக்க முடியலனு நினைக்கும் போது வெறி வருது சார்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா, "என்னடா ஆளாளுக்கு என் வாத்தியார் பல்லு பிடிச்சு பார்க்கிறீங்களா.. டேய் வேம்புலி.. நான் உன்ன அடிச்சு தூக்குறேன்டா" என்று சவால்விடுவார். அதில் வரும் ஆர்யாவாக சாய் சுதர்சனையும், ரங்கன் வாத்தியாராக நெஹ்ராவையும் மாற்றி, டேய் ஆர்சிபி.. இன்னிக்கு நான் உன்னை முடிக்கிறேன்டா என்று சொல்லி சதம் அடித்ததாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பையன் பாஞ்சிட்டான் ரகம்.

போக்கிரி படத்தில் விஜய், எல்லாம் தர டிக்கெட்டா இருக்கு.. தட்டிட்டு போய்ட்டே இருக்கலாம்ல என்று சொல்வார்.. அதற்கு டென்ஷனாகும் வில்லன், "டேய் மெண்டல்.. மெண்டல்" என்று விஜய்யை திட்டுவார். அதில் வரும் விஜய்யாக விராட் கோலியையும், வில்லனாக அபிஷேக் சர்மா மற்றும் குருவாக வைபவ் சூர்யவன்ஷியையும் மாற்றி, "2011ல் சச்சினோட ஆரஞ்ச் கேப்புக்கு போட்டி போட்டான்.. இப்போ அவர் பையன் ஆடிட்டு இருக்கான்.. அவங்க கூடயும் ஆரஞ்ச் கேப்புக்கு போட்டி போட்டுனு இருக்கான்.. மெண்டலு" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ் ரகம்.

-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
சுப்மன் கில் அவுட்.. வெறித்தனமாக கத்தி கொண்டாடியா விராட் கோலி! அனுஷ்கா சர்மா பக்கம் திரும்பிய கேமரா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications