எவ்வளவு மோசமா ஆடினாலும் 49 ரன்னை தாண்டிடுறாங்க.. வென்றும் சோகமாக உள்ள ஆர்சிபி.. தெறிக்கும் மீம்ஸ்!
டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பின்னரும் கூட ஆர்சிபி அணியின் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். இதுதொடர்பாக சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
அறை எண் 305ல் கடவுள் படத்தில் கஞ்சா கருப்பின் ரூமிற்கு வரும் காதல் சுகுமார், அங்கிருக்கும் இளவரசை பார்த்து, "எப்படிண்ணே.. எப்படிண்ணே.. அவ்வளவு பணம் சம்பாரிச்சிட்டு இப்படி கக்கூஸ் மாதிரி இருக்க ரூமிற்குள் அடைஞ்சிருக்க முடியுது" என்று கேட்பார். அதில் வரும் காதல் சுகுமாராக சிஎஸ்கே ரசிகரையும், இளவரசாக ஆர்சிபி அணியாகவும் மாற்றி, "எப்படிண்ணே.. எவ்வளவு மோசமா ஆடினாலும் 49 ரன்களை தாண்டிறாங்க" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் எல்லாம் ஆர்சிபிக்கு வந்த நேரம் ரகம்.

வேலாயுதம் படத்தில் 2வது இடம் வந்ததை விஜய்யும், அவர் தங்கையும் கொண்டாடும் போது, சூரி மற்றும் பாண்டி இருவரும் முதலிடம் பிடிக்கவில்லையே என்று சோகத்தில் இருப்பார்கள். அதில் வரும் விஜய் மற்றும் தங்கையை டெல்லி அணி மற்றும் அதன் ரசிகர்களாகவும், சூரியாக புவனேஷ்வர் குமாரையும், பாண்டியாக ஹேசல்வுட்டையும் மாற்றி, டெல்லி அணி 49 ரன்களை கடந்துவிட்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் எப்பதான்டா ஆர்சிபி அணிக்கு விடிவுக்காலம் வரும் ரகம்.

இந்தியன் படத்தில் டீ-யில் குண்டு ஊசியை போட்டுவிட்டு செந்திலை டீ குடிக்க சொல்வார் கவுண்டமணி. அப்போது செந்தில் ஒரு மேக்னெட்டை வைத்து குண்டு ஊசியை எடுத்துவிட்டு, டீ-யை குடிப்பார். அப்போது கவுண்டமணி "எஸ்கேப் ஆகிட்டான்டா" என்பார். அதில் வரும் செந்திலை டெல்லி அணியாகவும், கவுண்டமணியை ஆர்சிபி அணியாகவும் மாற்றி, 49 ரன்களை கடந்து எஸ்கேப் ஆகிட்டான்டா என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு ரகம்.

தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியை பார்த்து நயன்தாரா, ஏன்டா ஒவ்வொரு முறையும் ஆசை காட்டி ஆசை காட்டி என்ன ஏமாத்துற என்று கேட்பார். அதில் வரும் ஜெயம் ரவியாக ஆர்சிபி அணியையும், நயன்தாராவாக ஆர்சிபி ரசிகர்களாகவும் மாற்றி, "49 ரன்னுக்குள் ஆல் அவுட் செய்வது போல் ஒவ்வொரு முறையும் ஆசை காட்டி ஆசை காட்டி என்ன ஏன்டா ஏமாத்துறீங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி ரகம்.













Click it and Unblock the Notifications