"என் கடமை எம்ஜிஆர்" சஞ்சு சாம்சனை வெளுக்கும் ருதுராஜ் ரசிகர்கள்.. தெறிக்கும் தரமான மீம்ஸ்!
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் நடந்த சம்பவங்களை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஜாலியான மீம்ஸை உருவாக்கி இருக்கின்றனர். இந்த செய்தியில் அதில் சிலவற்றை பார்க்கலாம்.

எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் விவேக் தந்தை மனோபாலா மோசமாக திட்டிக்கொண்டிருப்பார். அப்போது போலீஸ் உடையில் இருக்கும் விவேக், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியை ஒருவர் திட்டுகிறார். அதனை பொதுமக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று சொன்னவுடன், அங்கிருப்பவர்கள் மனோபாலாவை அடிக்க தொடங்கிவிடுவார்கள். இறுதியாக என் கடமை எம்ஜிஆர் என்று விவேக் சொல்லிவிட்டு ஓடிவிடுவார். அதுபோல் சஞ்சு சாம்சனால மனோபாலாவையும், விவேக்காக ருதுராஜ் ரசிகர்களையும் மாற்றி, "என் கடமை எம்ஜிஆர்" என்று சஞ்சு சாம்சனை வெளுப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இதுக்கு மேல பாடி தாங்காது ரகம்.

டாக்டர் படத்தில் ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் உள்ளிட்ட 3 பேரும் வாங்க.. எஸ்பி உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணுமாம் என்று யோகி பாபுவை கோர்த்துவிடுவார். அதில் வரும் ரெடின் கிங்ஸ்லியாக இஷான் கிஷனையும், யோகிபாபுவாக சஞ்சு சாம்சனையும் மாற்றி, "சேட்டா.. டக் அவுட் கிட்ட வாங்க.. கார்டு ஆஃப் ஹானர் கொண்டாட்டம் பண்ணனுமாம்" என்று கோர்த்துவிடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அமுக்கு டுமுக்கு அமால் டுமால் ரகம்.

ஒரு படத்தில் அதிக நகையுடன் வெளியில் சுற்றும் வடிவேலுவை பார்த்து அல்வா சீனு கத்தியால் குத்திவிடுவார். அப்போது சிங்கமுத்து, "நான் தான் முன்னாடியே சொன்னேன்லயா.. மண்டக்கோளாறு உள்ளவன் லூசுப்பய.. உள்ளவிட்டு கிண்டிருவான்னு" என்பார். இதில் வரு அல்வா சீனுவாக ஹர்திக் பாண்டியாவையும், வடிவேலுவாக நியூசிலாந்து அணியையும், சிங்கமுத்துவாக இந்திய அணியை மாற்றி, "மண்டக்கோளாறு உள்ளவன்.. ஆட்டத்தையே மாற்றிவிட்டுட்டானா" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் ரகம்.

புதுப்பேட்டை படத்தில் தனுஷை பார்த்து அழகம் பெருமாள், "இதை வச்சுக்கிட்டாடா என்ட்ட அவ்வளவு அடி வாங்கின" என்று கேட்பார். நியூசிலாந்து அணியின் ஃபின் ஆலன் 38 பந்துகளில் 80 ரன்கள் விளாசியதை ஒப்பிட்டு, அழகம் பெருமாளை இந்திய ரசிகனாக மாற்றி, "இவனை வச்சிக்கிட்டாடா இவ்ளோ நாளா என்கிட்ட அடி வாங்கின" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜஸ்ட் மிஸ்ஸு.. இல்லைனா முடிச்சிவிட்ருப்பான் ரகம்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications