லிட்டில் பிஸிஸா இருக்கோம்.. விஜய்யை அலையவிடும் விசிக, சிபிஎம், சிபிஐ.. தெறிக்கும் அரசியல் மீம்ஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெக பல்வேறு கட்சிகளிடமும் ஆதரவு கோரி வருகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் அத்தனை கட்சிகளைச் சேர்ந்த ஆதரவாளர்களும் சோசியல் மீடியாவில் ஜாலியாக மீம்ஸை வெளியிட்டு சூழலை கையாண்டு வருகின்றனர். அந்த மீம்ஸை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தாய்க்கிழவி படத்தில் வரும் ரெண்டு இட்லி கேரக்டர் தன்னை செல்ஃபோனில் அழைத்தவரிடம், கொஞ்சம் லிட்டில் பிஸிஸா இருக்கேன்.. நாளைக்கு சொல்லட்டுமா.. நல்வரவு நல்வரவு.. என்று கட் செய்வார். அதில் செல்ஃபோனில் அழைக்கும் கேரக்டராக தவெகவை மாற்றி, "ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பிருந்தோமே.. இன்னைக்கு முடிவு சொல்லிடுவீங்களா" என்று கேட்பதாகவும், அதற்கு சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகள், "பாஜக அரச கண்டிச்சி இன்னைக்கு ஒரு ஆர்ப்பாட்டம்.. லிட்டில்ஸ் பிஸிஸா இருக்கோம்.. நாளைக்கு சொல்லட்டுமா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் எப்போ என்ன நடக்குமோ தெரியலையே ரகம்.

எம்.குமரன் படத்தில் ஜெயம் ரவியை பார்த்து பிரகாஷ் ராஜ், "டேய்.. குமரா.. உனக்கு கிக் பாக்ஸிங் எல்லாம் தெரியுமாடா" என்று கேட்பார். அதில் வரும் பிரகாஷ் ராஜாக திமுகவையும், ஜெயம் ரவியாக காங்கிரஸ் கட்சியையும் மாற்றி, "டேய் பேரியக்கத்தான்.. போராட்டம்லாம் உங்களுக்கு பண்ணத் தெரியுமாடா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மேக்ஸ் டீச்சரா அவங்க ரகம்.

மும்பை அணி தோல்வி அடைந்ததால் சோகத்தில் இருக்கும் ரசிகரை பார்த்து லுங்கி பாய்ஸ் ராஜ் பிரியன் தோத்துட்டீங்க.. அப்போ தோத்துட்டீங்க என்று சிரித்து கொண்டே நக்கலாக கேட்பார். அதில் வரும் மும்பை ரசிகராக தவெக ஆதரவாளரையும், லுங்கி பாய்ஸ் ராஜ் பிரியனாக திமுக தொண்டரையும் மாற்றி, "இப்போ புரியுமே.. பாசிசம்னா என்ன.. பாயாசம்னா என்னனு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இவங்க வேற டார்ச்சர் பண்றாங்களே ரகம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜே பார்வதி அழுது கொண்டே இருந்த போது, அருகில் இருந்த வாட்டர்மெலன் ஸ்டார் ஸ்னாக்ஸ் தின்று கொண்டிருப்பார். அதில் வரும் விஜே பார்வதியாக தவெகவையும், வாட்டர்மெலன் ஸ்டாராக திமுகவையும் மாற்றி, "கவர்னர் பேரன் கிட்ட சொன்னா தாத்தா கிட்ட அழுது அடம்பிடிச்சி தளபதி ஆசைய நிறைவேத்த போறான்.. ஐடியா இல்லாத அண்ணா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஐயையோ முடியலடா சாமி ரகம்.

-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications