குக்கரை ஏன்டா தூக்கிட்டு போன.. குக்கர மேல விசில் இருந்துச்சு சார்.. தவெகவை அதிரவிடும் மீம்ஸ்!
சென்னை: தவெக மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குதிரை பேரக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அமமுக எம்எல்ஏ காமராஜ் தவெகவுக்கு ஆதரவாக கடிதம் கொடுத்த வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
தவெக தலைவர் விஜய் நேற்று இரவு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை 3வது முறையாக சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனால் விஜய் முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக அமமுக எம்எல்ஏ காமராஜ் கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.

தொடர்ந்து, அமமுக எம்.எல்.ஏ காமராஜ் தவெகவை நிபந்தனையின்றி ஆதரிப்பதாக போலி கடிதம் அளித்துள்ளனர். ராவணைனை சீதை தூக்குவது போல் எங்கள் எம்.எல்.ஏவை தூக்கியுள்ளனர். ஆட்சி அமைப்பதற்கு முன்பே இப்படியா, இது தான் தூய சக்தியா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார். இது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அமமுக எம்எல்ஏ காமராஜ் கைப்பட தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக எழுதிய கடித வீடியோவை தவெக வெளியிட்டது. இதன் மூலமாக என்டிஏ கூட்டணியில் இருக்கும் அமமுகவிடம் ஆதரவு கோரி தவெக தரப்பு நாடியது தெரிய வந்துள்ளது. இது தவெக மீதான குதிரை பேர குற்றச்சாட்டுகளுக்கு இடம் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் அமமுகவிடம் ஆட்சி அமைக்க தவெக ஆதரவு கோரியது தொடர்பாக சோசியல் மீடியாவில் மீம் உருவாக்கப்பட்டு வருகிறது. அப்படியொரு மீமில், ஆளுநர் "குக்கரை ஏன்டா தூக்கிட்டு போன" என்று கேட்பதாகவும், அதற்கு தவெக, "குக்கர் மேல விசில் இருந்துச்சு சார்.. அதான்" என்று பதில் அளிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அடப்பாவிகளா ரகம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!











Click it and Unblock the Notifications