குஜிலி மஸ்த்து யாரு பண்ணது.. 4 போட்டியில் தொடர் தோல்வி.. மும்பையை ஓடவிடும் சிஎஸ்கே ரசிகர்கள் மீம்ஸ்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் 4 தோல்விகளுடன் 9வது இடத்திலேயே நீடித்து வருகிறது. இதனை வைத்து சிஎஸ்கே அணி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மீம்ஸ் வெளியிட்டு உற்சாகம் அடைந்துள்ளனர்.

தூள் படத்தில் விவேக்கிடம் திருப்பதி செல்கிறேன் என்று பணம் கேட்கும் மயில்சாமி, பாஸ் இதை வைத்து கீழ் திருப்பதி வரைக்கும் தான் போக முடியும் என்று சொல்வார். இதில் வரும் மயில்சாமியாக ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சஹராகயும், விவேக்கை ஹர்திக் பாண்டியாவாகவும் மாற்றி, பாஸ் இந்த ரன்னை வச்சிக்கிட்டு 16 ஓவர்கள் வரைக்கும் தான் போட முடியும் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எல்லாம் எங்க நேரம்டா ரகம்.

memes mumbai indians csk

லுங்கி பாஸ் ராஜ் பிரியன் ஒரு வீடியோவில் ஆர்சிபி ஜெர்சி அணிந்து கொண்டு மும்பை அணி ரசிகரை, தோத்துட்டீங்க.. அப்போ தோத்துட்டீங்க என்று சிரித்து கொண்டே நக்கலாக கேட்பார். அதனை அப்படி மாற்றி ராஜ் பிரியன் சிஎஸ்கே ஜெர்சி அணிந்து கொண்டு, "5 மேட்ச்ல 2 மேட்ச் கூட ஜெயிக்க முடியாம எப்படிதான் இருக்கானுங்களோ" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குஜிலி மஸ்த் ரகம்.

memes mumbai indians csk

கருப்பசாமி படத்தில் வடிவேலு, "நகைக்கடைக்காரர் மகன்னா விட்ருவோமா.. கைல எவ்ளோ பணம் இருக்கு.. ரூ.10 ஆயிரம் பத்தாதேடா" என்று சார்லஸிடம் சொல்லுவார். அதில் வரும் வடிவேலுவாக ஷர்துல் தாகூரையும், சார்லஸாக ஹர்திக் பாண்டியாவையும் மாற்றி, "இந்த ஸ்கோர்லாம் பத்தாதேடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

memes mumbai indians csk

வடசென்னை படத்தில் தனுஷை அடிக்கும் சமுத்திரக்கனி, "மச்சா யார்ரா இவனுங்க" என்று கேட்பார். நேற்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் பவுண்டரி லைனில் நின்று கொண்டு டைவ் அடித்து ஒரு கேட்ச்சை பிடிப்பார். அதனை பார்த்து ரோகித் சர்மா சூர்யகுமாரிடம் ஒரு ரியாக்சன் கொடுப்பார். அதில் வரும் ரோகித் சார்மாவாக சமுத்திரகனியை மாற்றி, "மச்சா யார்ரா இவன்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ் ரகம்.

memes mumbai indians csk

எதிரி படத்தில் பாவனா, "இந்நேரம் அவன் ரவுடியாக மாறி இருப்பான்.. தேவையில்லாம நடுவுல வந்து காரியத்தையே கெடுத்துட்டியேடா" என்று வடிவேலுவை அடித்து கொண்டிருப்பார். அதில் வரும் வடிவேலுவாக கேகேஆர் அணியையும், பாவனாவாக சிஎஸ்கே ரசிகர்களையும் மாற்றி, "5க்கு 5 தோத்துருப்பான்.. தேவையில்லாம முதல் மேட்ச் ஆடி கெடுத்துட்டியே டா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜஸ்ட் மிஸ் ரகம்.

memes mumbai indians csk
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+