கேக்கவே கூச்சமா இருக்கு.. அனல் பறக்கும் கூலி பட டிக்கெட் புக்கிங்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள கூலி படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில், பல இடங்களில் ஐந்து நாட்களுக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்த படத்திற்கான ஆர்வமும் ஹைப்பும், நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வரும் 14ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கான டிக்கெட்டுகளை பெற ரசிகர்கள் முந்தி முந்தி வரிசையில் நிற்கிறார்கள். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பல முன்னணி நடிகர்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளார். சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, அமீர் கான், நாகார்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்டோரின் ரசிகர்கள் ஒரு பக்கம், சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் மற்றொரு பக்கம் என, நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் டிக்கெட் புக்கிங் வேகமாக முடிந்து வருகிறது.

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி, அனிருத் இசைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழா, ரசிகர்களிடம் "படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்" என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது. பல மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை, அனைத்து மாநிலங்களிலும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
சில நிறுவனங்கள் படத்திற்காகவே விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால் இங்கு பலருக்கு டிக்கெட் கிடைக்காதது தான் வருத்தமாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் டிக்கெட் புக்கிங்கை கலாய்த்து, பலரும் மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.




















Click it and Unblock the Notifications