படம் ஓடிடி ல வந்தது ஒரு குத்தமாடா.. இப்படி அடிக்கிறீங்க!!!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வெளியாவதற்கே ரசிகர்கள் மத்தியில் அசாதாரணமான எதிர்பார்ப்பு உருவானது. அதற்கு முக்கிய காரணம், இந்தப் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் என்பதுதான். அவர் முன்பு இயக்கிய கைதி மற்றும் விக்ரம் போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதால், கூலிக்கும் அதே மாதிரியான தீவிர எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் படம் வெளியான பிறகு, அந்த எதிர்பார்ப்புகளுக்கு சமமாக இல்லையென்று பலரும் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக, லோகேஷ் முன்பு கொடுத்த படங்களின் சாயலில் இருக்கும் என்று நினைத்த ரசிகர்கள், எதிர்பாராத விதமாக ஏமாற்றமடைந்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் அதிகம் வந்தன.

இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது. வெளியானதும் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும், கலவையான கருத்துகளும் குவிந்து, படம் ஒரு ரவுண்ட் பெரிய பேச்சு பொருளாக மாறியது. ரசிகர்கள் இடையே படம் குறித்த விவாதங்கள் சில நாட்கள் சூடுபிடித்தன.
இப்போது, கூலி சமீபத்தில் ஆன்லைன் ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் அந்தப் படம் மக்களிடையே பேசப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்கில் பார்க்க தவறியவர்கள் தற்போது ஓடிடி வழியாக படம் காண ஆரம்பித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் மீண்டும் படத்தைப் பற்றிய ரியாக்ஷன்கள் அதிகரித்துள்ளன. சிலர் தீவிரமாக படம் பிடித்தது என்று சொல்கிறார்கள், இன்னும் சிலர் மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள். இவ்வாறு, இரண்டாவது ரவுண்டாக கூலி மீண்டும் இணையத்தில் ஹாட் டாப்பிக் ஆகி வருகிறது.






















Click it and Unblock the Notifications