₹600 சிலிண்டர் ₹1200 ஆக்கி! இப்போ ₹200 குறைச்சு இருக்காங்களே! எப்படி திமிங்கலம்? கலாய்க்கும் மீம்ஸ்
சென்னை: கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ள நிலையில் அதை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
நேற்று நாடு முழுக்க கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.92.50 குறைக்கப்பட்டு ரூ.1,852.50-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்று சென்னையில் ரூ.1,118.50-க்கு விற்பனை ஆனது.

இந்த நிலையில்தான் தற்போது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் அதாவது 14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 5 மாநில தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்கள் வர உள்ளதால் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இந்தியாவில் கடந்த வருடம் பாதி வரை பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. இன்னொரு பக்கம் கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்தது.
கச்சா விலை குறைந்தும் கூட பெட்ரோல் டீசல் விலை, கேஸ் விலை குறையாமல் இருந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கேஸ் சிலிண்டர் விலை தற்போது 1200க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

மீம்ஸ்: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பெரிதாக இல்லை. கச்சா எண்ணெய் விலை 140 டாலரில் இருந்து 72 டாலராக குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை. அதோடு இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் வர்த்தகத்தில் மொத்தமாக 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிகர லாபம் பார்த்துள்ளது.

ஆனாலும் சிலிண்டர் விலை இத்தனை நாட்களுக்கு பின் தேர்தல் நேரத்தில் குறைக்கப்பட்டு உள்ளது. அதை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். 2023ம் வருடம் தெலுங்கானா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. கர்நாடக தேர்தல் தோல்வி காரணமாக வரப்போகும் மற்ற தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.

இந்த தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது கேஸ் விலையை குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதைத்தான் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர் .

கேஸ் விலையை ரூ. 200 குறைச்சதுக்கு பதிலாக, பெட்ரோல், டீசல் விலையை ரூ.50 குறைச்சிருந்தா, காலேஜ் பசங்க, இளந்தாரி பசங்க, மிடில் க்ளாஸ் குடும்பஸ்தர்ங்கனு மொத்த ஓட்டுகளையும் அள்ளிடலாம். கேஸ் சிலிண்டர் விலை ஏறுனா எண்ணெய் நிறுவனங்கள் காரணமாம்..விலை குறைஞ்சா மோடி காரணமாம் அது எப்படி திமிங்கலம்..??

₹600 சிலிண்டரை ₹1200 ஆக்கி இப்ப ₹200 குறைச்சிருக்கேனே.. அது கூட உங்களுக்காகதான்.. நீங்க கஷ்டப்பட்டா என்னால தாங்க முடியாதுல.. கேஸ் விலைய கூட்டுனா தேசநலனுக்காகனு ஒரு மாதாகி ஜே.. விலைய குறைச்சா மக்கள்நலனுக்காகனு ஒரு மாதாகி ஜே.. என்று நெட்டிசன்கள் மீம் போட்டு கிண்டல் செய்துள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications