ஒன்னுமே செய்யாமல் கப் வாங்கிய ராகுல்! வறுத்த நெட்டிசன்ஸ்! அஸ்வினை கேப்டனாக்குங்கள்.. பறக்கும் மீம்ஸ்
டாக்கா: வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வென்ற நிலையில் பலரும் அதை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் - ஷ்ரேயாஸ் - அக்சர் அதிரடியால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி 227-10 ரன்களை எடுத்தது.
73.5 ஓவர்கள் மட்டுமே பிடித்த வங்கதேசம் உமேஷ் 4 விக்கெட், அஸ்வின் 4 விக்கெட் எடுத்த காரணத்தால் சுருண்டது. அதன்பின் இறங்கிய இந்திய அணியில் பண்ட் 93 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் 87 ரன்கள் எடுத்தார். இதனால் முதல் இன்னிங்சில் இந்திய அணி 314-10 ரன்கள் எடுத்தது. இதன்பின் இரண்டாவது இன்னிங்ஸ் இறங்கிய வங்கதேசம் அணி தொடக்கத்தில் இருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

ராகுல் கேப்டன்சி
இதனால் வங்கதேசம் 231-10 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா களமிறங்கியது. டாப் ஆர்டர் மோசமாக சரிய கடைசியில் அஸ்வின், ஷ்ரேயாஸ் அதிரடியால் இந்தியா வென்றது. இதில் முதல் இன்னிங்சில் ராகுல் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். இந்த வருடம் முழுக்கவே எந்த பார்மட்டிலும் கே எல் ராகுல் சரியாக ஆடுவது இல்லை. டெஸ்ட் போட்டிகளில் குறைந்த ஆவரேஜ் வைத்து இருக்கும் தற்கால பேட்ஸ்மேன்களில் இவர்தான் முதலிடத்தில் உள்ளார்.

மோசமான கேப்டன்
இதையடுத்து நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். வெறும் கப் மட்டும் வாங்க எதற்கு கேப்டன். அவர் கேப்டனாக செய்தது என்ன என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 2, 10, 23, 22, 10, 12, 8, 10, 2 இதுதான் கடைசியாக 9 டெஸ்ட் போட்டிகளில் கே எல் ராகுல் எடுத்த ரன்கள். இப்படி ஒரு வீரருக்குத்தான் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. வாய்ப்பு வழங்குவதோடு இல்லாமல் இவருக்கு கேப்டன் பொறுப்பையும் இந்திய அணி வழங்குவதுதான் மிகப்பெரிய காமெடியாக உள்ளது.

அஸ்வின்
இன்னொரு பக்கம் அஸ்வின் இன்று சிறப்பாக ஆடினார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் எடுத்தார். இன்று தொடக்கத்தில் இருந்தே பெரிதாக டென்சன் ஆகாமல் அஸ்வின் ஆடினார். பிட்ச் நேற்றும், இன்றும் ஸ்பின் பவுலிங் செய்ய அதிக சாதகமாக இருந்தது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டுதான் இன்று அஸ்வின் சிறப்பாக ஆடினார். இன்று அஸ்வின் இறங்கிய போது இந்திய அணி 74-7 ரன்கள் எடுத்து திணறிக்கொண்டு இருந்தது. இதன்பின் இறங்கிய அஸ்வின் 62 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

ராகுல் பேட்டிங்
டெயில் என்டர் அஸ்வின் சிறப்பாக ஆடிய அளவிற்கு டாப் ஆர்டர் ஓப்பனர் ராகுல் சிறப்பாக ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் குறைந்த ஆவரேஜ் வைத்து இருக்கும் தற்கால பேட்ஸ்மேன்களில் இவர்தான் முதலிடத்தில் உள்ளார். அதாவது 45 போட்டிகளுக்கும் மேல் ஆடிய டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் குறைந்த ஆவரேஜ் 34.26, வைத்து இருக்கும் ஒரே வீரர் இவர்தான். இதனால் அவரை கேப்டன்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அவரை அணியில் இருந்தே நீக்க வேண்டும் என்றும் பிரசர் கொடுக்கப்பட்டு வருகிறது.

அஸ்வின் பேட்டிங்
மாறாக அஸ்வினை கேப்டன் ஆக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் கேப்டனாக தொடர வேண்டும். ஒருநாள், டி 20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவோ, ரோஹித் சர்மாவோ கேப்டனாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட தொடங்கி உள்ளனர். அஸ்வின் பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் பல புதிய வியூகங்களை புகுத்துவார். அவர் கேப்டனாக இருந்தால் இன்னும் பல சோதனை முயற்சிகளை செய்வார் என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications