அந்த 4 ஓட்டையை பற்றி ஒன்னுமே சொல்லலியே டாக்டர் சார் .. வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்த அறிக்கையை நேற்று வெளியிட்டது. ஏற்கனவே பல்வேறு சந்தேகங்கள் நீடிக்கும் ஜெ மரணத்தில் தற்போது எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கையை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

உலக தரம் வாய்ந்த சிகிச்சைதான்

ஆமா நாங்க தான் ஜெ.க்கு சிகிச்சை அளித்ததை பாராட்டுனோம்.. ஜெ.க்கு உலக தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.. அதான் இறந்துட்டாங்க #எய்ம்ஸ்

ஜெ.வை காட்டாமல் ஏன் மறைத்தீர்கள்

ஜெயலலிதாவிற்கு தரப்பட்ட சிகிச்சையில்
எதையும் மறைக்கவில்லை -#எய்ம்ஸ்

#ஜெயலலிதாவை காட்டாமல் ஏன்
மறைத்தீர்கள் என்பது தானே கேள்வியே ???

அறிவுரை மட்டுமே வழங்கினோம்

சிகிச்சை அளிக்கவில்லை
அறிவுரை மட்டுமே
வழங்கினோம்..

எய்ம்ஸ் அப்பல்லோ அண்டப் புளுகு

இனி ஜெ. எழுந்து வந்து எனது மரணம் இயற்கையானதுதான் என்று சொன்னாலும் நம்ப மாட்டாங்க!
#எய்ம்ஸ் அப்பல்லோ புழுகு

நீங்க ஏன் பதில் சொல்றீங்க

#அரசியல் கேள்விகளுக்கு #எய்ம்ஸ் மருத்துவமனை
பதில் தர வேண்டிய #அவசியம் என்ன ?

எய்ம்ஸ் நீங்களுமா ?

#எய்ம்ஸ்... நீயுமா.?
எங்களை #ஏமாத்துன..??
#பிளடி_பாஸ்கர்..

எப்ப சொல்றாங்க பாருங்க

#செப்28ல் அவருடைய உடம்பு #செய்ற்கைசுவாசத்திற்கு கூட ஒத்துழைக்கவில்லை.? #எய்ம்ஸ்...
எப்ப #சொல்லுறான்னு_பாத்தியா_மச்சி...!?!

ஆலோசனை நடத்துனாங்களா

சிகிச்சையின்போது காவிரி பிரச்சினை பற்றி ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்
#எய்ம்ஸ் அறிக்கை
செயற்கை சுவாசம் கொடுக்கும் போது ஆலோசனை நடத்துனாங்களா...

எதையும் நம்பபோவதில்லை

எத்தனை பக்கம் அறிக்கை வந்தாலும் ஒரு போட்டோ/ஆடியோ/வீடியோ இல்லாமல் மக்கள் எதையும் நம்பப்போவதில்லை. #எய்ம்ஸ்

ஓட்டைய பத்தி ஒன்னுமே சொல்லல

அந்த நாலு ஓட்டையை பற்றி ஒன்னுமே சொல்லலியே டாக்டர் சார் ..#எய்ம்ஸ் அறிக்கை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+