அட நீ வேற.. பொண்டாட்டி பேரையே ஓவியான்னு மாத்தப் போறேன்..! #ஓவியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குடிநீர் பிரச்சினை தொடங்கி நெடுவாசல், கதிராமங்கலம் வரை அனைத்து பிரச்சினைகளையும் மறக்கடிக்கச் செய்து விட்டது பிக்பாஸ். பலரும் ஓவியா பித்து பிடித்து அலைகின்றனர்.

ஓவியா... ஓவியா என்று ஒரு கூட்டம் விடாமல் ட்வீட் போட்டு வருகிறது. ஓவியாவின் பெயரை மந்திரம் போல உச்சரிக்கின்றனர் சமூகவலைத்தளவாசிகள்.

சில சுவாரஸ்யமான ட்வீட்களை உங்களுக்கு தொகுத்து அளித்திருக்கிறோம் படித்து ரசிங்க மக்களே.

தானா சேர்ந்த கூட்டம்

இது தானா சேர்ந்த கூட்டம், பொண்ணுக்கு தங்க மனசு என்று சினிமா படத்தின் பெயர்களை வைத்து மீம்ஸ் போட்டுள்ளார் ஓவியா ஆதரவாளர் ஒருவர்.

ஜூலியா?

ஜூலிங்கிற பேரு என் வீட்டு காலண்டர்ல கூட இருக்கக்கூடாது என்கிறார் இந்த ஓவியா ஆதரவாளர்.

லெவல்

ஓவியா பிக்பாஸ் வீட்ல டிவியில அழுதா கூடவே சேர்ந்து அழுவறதெல்லாம் வேற லெவல் என்று பதிவிட்டுள்ளார் மற்றொருவர்.

நீங்க நீங்கதான்...

அழுதாலும் அதை பாக்குறவங்க பாத்துரக் கூடாதுன்னு நினைக்கிற தலைவி ஓவியா எங்க.. அடுத்தவங்க பாக்கறதுக்காகவே அழுவறு ஜூலி நீ எங்க.. என்று கேட்டுள்ளார் ஒருவர்.

ஓவியாவை தெரியாதா?

யார் அந்த ஓவியா என்று கேட்டுள்ளார் எம்எல்ஏ ஜெ. அன்பழகன். இதற்கு ஓவியா ஆர்மிதான் பதில் சொல்ல வேண்டும்.

பேரை மாத்தப்போறேன்

பெண் குழந்தை பிறந்தா ஓவியா என்று பெயர் வைக்கப் போவதாக கூறியுள்ளார் ஒருவர், அதற்கு மற்றொருவரோ பையன் பிறந்தநாலும் ஓவியாதான் என்று பதிவிட்டுள்ளார். ஓவியா ஆர்மியை சேர்ந்த மற்றொருவரோ, மனைவியின் பெயரை மாற்றிவிடலாம் என்று யோசிப்பதாக கூறியுள்ளார்.

எத்தனை வேலை பார்க்கணும்

கபடிக்கு அம்பாசிடர் ஆக இருக்கணும், பிக்பாஸ் நடத்தணும், சினிமாவில நடிக்கணும், கூடவே டுவிட் போடணும் அப்புறம் எலும்பு நிபுணர் வேற என்று கமல் புலம்புவதாக ஒருவர் மீம்ஸ் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes creaters are working overtime on Oviya and Big boss memes and Twitter is flooded with the kind of memes.
Please Wait while comments are loading...