மானம் காக்க நிவாரணம் கேட்டோம் இன்று அதையும் துறந்து நிர்வாணமானோம்!

டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று திடீர் நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டது ஒட்டு மொத்த தமிழர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று திடீர் நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டது ஒட்டு மொத்த தமிழர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தமிழக விவசாயிகளை இந்த நிலைக்கு தள்ளிய மத்திய அரசைக் கண்டித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றனர்.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் இன்று பிரதமர் அலுவலகம் எதிரே ஆடைகளை கலைந்து நிர்வாண போராட்டம் நடத்தினர். டெல்லி போலீசார் பிரதமர் மோடியை சந்திக்க வைப்பதாக கூறி அழைத்து சென்று ஏமாற்றியதே இதற்கு காரணம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மத்திய அரசைக் கடித்தும் சமூக வலைதளங்களில் உருக்கமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...

விவசாயிகள் முழு நிர்வாண போராட்டம்

தலைநகரில் ஆடைகளை கலைந்து #விவசாயிகள் முழு நிர்வாண போராட்டம்.

வேடிக்கை பார்க்க ஆளும் பாசிஸ பிஜேபிக்கு எப்படி மனசு வருகிறது என்று தெரியவில்லை என்கிறார் இந்த நெட்டிசன்

மானம் காக்க நிவாரணம்

மானம் காக்க நிவாரணம் கேட்டோம் இன்று அதையும் துறந்து நிர்வாணமானோம்...

விவசாயிகளின் போராட்டத்தால் இதயமே நொருங்குவதாக உள்ளது என தெரிவித்துள்ளார் இந்த வலைஞர்..

தமிழக அரசை கலைக்க வேண்டும்

தமிழக #விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துகிறனர் அவர்களை இதுநாள் வரை உணராத கையாளாகாத தமிழக அரசை #கலைக்க வேண்டும் என உணர்ச்சி பொங்க கூறுகிறார் இந்த நெட்டிசன்

விவசாயிகள்

#விவசாயிகள் #நிர்வாணப்போராட்டம் ஒட்டுமொத்த தமிழர்களும் நிர்வாணமாய் மாற்றப்பட்ட வலியை தருகிறது என்கிறார் இந்த வலைஞர்...

இந்தியாவிற்கே அவமானம்

விவசாயிகளின் #நிர்வாணம்..! இந்தியாவிற்கே #அவமானம்...!! என விவசாயிகளின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசை சாடுகிறார் இந்த நெட்டிசன்..

அவமானம்

இதைவிட அவமானம் தமிழனுக்கும் இங்கிருக்கும் தலைவர்களுக்கும் உண்டா? என கேட்கிறார் இந்த வலைஞர்..

மோடிஜி

மோடிஜி இந்த விவசாயிகளை குறைந்த பட்சம் மனிதர்களை போன்று நடத்துங்கள்.. உங்கள் இவர்களுக்காக 5 நிமிடம் ஒதுக்க முடியாதா? என கேட்கிறார் இந்த நெட்டிசன்...

விவசாயம் செய்வதே தேசத்துரோகம்

இதையெல்லாம் பார்க்கும் போது விவசாயம் செய்வதே தேசத்துரோகம் என இந்திய அரசு அறிவித்துவிடும் எனத் தெரிகிறது என தனது விரக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த வலைஞர்

நடிகை நிர்வாணம்

ஒரு நடிகை நிர்வாணம் என்றால் இந்தியாவே பரபரப்பாக பேசப்பட்டிருக்கும் ..

ஆனால் விவசாயிகளை தானே டெல்லியில் நிர்வாணமாக உள்ளனர்... மத்திய அரசு மவுனியாக இருப்பதை சாடுகிறார் இந்த நெட்டிசன்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+