For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லாமே அவர் தான்... கமலின் அரசியல் பிரவேசத்தை மீம்ஸ் போட்டுக் கொண்டாடும் நெட்டிசன்கள்

நடிகர் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து நெட்டிசன்கள் ஜாலி மீம்ஸ்கள் வெளியிட்டு வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரையில் கட்சி பெயரை அறிவித்தார் கமல்ஹாசன் | Oneindia Tamil

    மதுரை: நடிகர் கமல்ஹாசன் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

    அதன் ஒருகட்டமாக நேற்று மாலை, மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமது கட்சியின் பெயர், 'மக்கள் நீதி மய்யம்’ என அவர் அறிவித்தார். சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இணைந்த கைகளின் நடுவில் நட்சத்திரம் இருப்பது போன்ற கொடியையும் அப்போது அவர் அறிமுகப்படுத்தினார்.

    வழக்கம் போல, கமலின் அரசியல் பிரவேசம், கட்சிப் பெயர், கொடியின் அமைப்பு என எல்லாவற்றை வைத்தும் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் தயாரித்து இணையத்தில் உலாவ விட்டுள்ளனர்.

    அவற்றில் நச்சென்று இருந்த சில மீம்ஸ்கள் உங்களுக்காக...

    லிஸ்ட் ரெடி:

    புதிய கட்சித் தொடங்கியுள்ள கமல் தனது வேட்பாளர்களையும் தேர்வு செய்து விட்டார் என்கிறது இந்த மீம். இதில் உள்ள அனைத்துப் படங்களிலும் இருப்பவர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒன்னியும் கவலை வேண்டாம்:

    எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க. கட்சி ஆரம்பிச்சாச்சு. அடுத்து முதல்வராகிட்டா எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து விடும் என்று கூறுகிறது இந்த மீம்ஸ்.

    இது வேற கமல்:

    பாஜகவின் சின்னமான தாமரையை இந்தியில் கமல் என்றே குறிப்பிடுவார்கள். ஆனால், அந்த கமலுக்கு நோ சொன்ன தமிழக மக்கள் இந்த கமலுக்கு ஓகே சொல்லியிருப்பதாக இந்த மீம்ஸ் கூறுகிறது.

    எத்தனை கமல்:

    புதிதாகக் கட்சித் தொடங்கியுள்ள கமல், ஆட்சியில் அமர்ந்தால் அவரது அமைச்சரவை இப்படித்தான் இருக்கும் என்கிறார் இவர்.

    English summary
    Kamal Haasan on Wednesday launched his political party “Makkal Needhi Maiam” at the founding function in Tamil Nadu’s Madurai and yes netizens designed funny memes out of this too.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X