கொரோனாவால இப்பல்லாம் நமக்கு வாரத்துல 7 நாள் கிடையாது.. மூணே நாள் தான்.. எப்படித் தெரியுமா?
லாக்டவுண் நாட்கள் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: ஒவ்வொருவரிடமும் லாக்டவுண் அனுபவங்கள் ஒரு புத்தகம் போடும் அளவிற்கு உள்ளது. வீட்டில் இருப்பவர்கள் ஆன்லைன் கிளாஸ், ஒர்க் பிரம் ஹோம், செல்போன் விளையாட்டு, சமூகவலைதளத்தில் பொழுதுபோக்கு, தொலைக்காட்சி என தங்களுக்குப் பிடித்தமான வகைகளில் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர்.
வேலையிழப்பு, சம்பளம் குறைப்பு என குடும்பத் தலைவர்கள் ஒரு புறம் சோக கீதம் வாசித்தாலும், மறுபுறம் பப்ஜி, மீம்ஸ் என ஜாலியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர் மாணவர்கள். அதிலும் லாக்டவுண் பற்றிய மீம்ஸ்கள் தான் தற்போது இணையத்தில் வைரல்.
அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலியான மீம்ஸ்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்...

இது என்னடா புது டிசைன்
இதுநாள் வரை சத்தமில்லாமல் ஓடி ஒளிந்து பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தவர்கள் கூட, தற்போது சுதந்திரமாக வீட்டிற்குள்ளேயே விளையாடுகின்றனர். ஆனால் பப்ஜி விளையாட்டின் வழக்கமான உரையாடலைப் பற்றித் தெரியாத அப்பா, அம்மாக்கள் தான் குழம்பிப் போய் இருக்கின்றனர். அதுக்கு உதாரணம் தான் இந்த மீம்ஸ்.

இதுவே என் கட்டளை
எப்போதும் வீட்டிலேயே சும்மாவே இருப்பதால் எதையாவது கொரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறது வாய். பாவம் குழந்தைகளுக்கு குடும்ப நிலவரம் தெரிவதில்லை. விதவிதமாக சமைத்துக் கொடுத்து ஓய்ந்து போன அம்மாக்கள் ஒருபுறம், செல்விற்கே காசில்லாத போது ஸ்நாக்ஸுக்கு எங்கே போவது என்ற அப்பாக்கள் மறுபுறம். அப்படி பொங்கி எழுந்த அப்பாவின் மனநிலை தான் இந்த மீம்ஸ்.

வடிவேலு காலெண்டர்
வடிவேலு இல்லாமல் மீம்ஸ்-ஆ? விதவிதமாக நடிகர், நடிகைகளை வைத்துத் தானே காலெண்டர் டிசைன் பண்ணிப் பார்த்திருப்பீர்கள். இதோ நம்ம வடிவேலு ரியாக்ஷன் காலெண்டர் இது. என்ஜாய் மக்களே...

7 நாளெல்லாம் கிடையாது
முன்பெல்லாம் வாரமெல்லாம் ஓடி ஓடி உழைத்தவர்கள், படித்தவர்கள் எல்லாம் எப்போது ஞாயிற்றுக் கிழமை வரும் எனக் காத்துக் கிடப்பார்கள். ஆனால் இப்போது வீடே அலுவலகமாக, பள்ளிக் கல்லூரியாக மாற்றி விட்டார்கள் நாளும் தெரிய மாட்டேங்குது... கிழமையும் தெரிய மாட்டேங்குது பாஸ்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications