அடக்கடவுளே.. ரஜினியை வைத்தே பாஜக வெற்றியை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. என்னமா யோசிக்கிறாங்க!
பாஜக வெற்றியை ரஜினி படக் காட்சியை வைத்து கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: தேசிய அளவில் மக்களவைத் தேர்தலில் பாஜக கை ஓங்கி இருந்தாலும், தமிழகத்தில் அக்கட்சியின் செல்வாக்கு செல்லுபடியாகவில்லை என்பதை வீடியோ மீம்ஸாக வெளியிட்டு கலாய்த்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் அதிக இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அதன் வெற்றி ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

ஆனால், தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு எடுபடவில்லை. இங்கு அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து களமிறங்கியது. அக்கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. திமுக கூட்டணி தான் முதலிடத்தில் உள்ளது.
தேசிய அளவில் வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் தாமரையை மலர வைக்க முடியவில்லையே என இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இது தொடர்பாக வீடியோ மீம்ஸ் ஒன்றும் வைரலாகியுள்ளது. காலா படத்தில் ரஜினியும், நானே படேகரும் பேசும் காட்சியை வைத்து இந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
நிஜத்தில் பாஜக வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு தனது டிவிட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினி. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரது படக்காட்சியை வைத்தே பாஜக வெற்றியை கலாய்த்துள்ள நெட்டிசன்களின் குறும்பை என்னவென்று சொல்ல.












Click it and Unblock the Notifications