இது என்ன பாட்டா இருக்கும்...?.. அமைச்சர் ஜெயக்குமாரின் சன்டேயை ஜாலிடேயாக்கிய மீம்ஸ்!!
தம்மை வைத்து வந்த மீம்ஸை பார்த்து அமைச்சர் ஜெயக்குமார் ஜாலியாகியுள்ளார்.
Recommended Video

சென்னை: தமது செல்போனுக்கு வந்த மீம்ஸ் ஒன்றை பார்த்து மிகவும் ஜாலியானதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் மிகவும் வலிமையான அமைச்சராக இருப்பவர் டி.ஜெயக்குமார். மீன்வளத்துறை அமைச்சரான இவர், அதிமுகவிலும் மிக வலிமையானவர். கட்சி மற்றும் ஆட்சி விவகாரங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் தெளிவாக பேசக்கூடியவர் ஜெயக்குமார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதிருந்து அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதை தவிர்த்து வந்த ஜெயக்குமார், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தினமும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
இவர் பேசுவதை எல்லாம் கிண்டல் செய்யும் வகையில், நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ஆனால் அது பற்றி எல்லாம் அமைச்சர் ஜெயக்குமார் கவலைப்படுவதில்லை.
இதற்கு உதாரணமாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று அவரது செல்போனுக்கு ஒரு மீம்ஸ் வந்தது. அதைப்பார்த்த உடன் மனிதர் குஷியாகிவிட்டாராம். அந்த மீம்ஸில் அமைச்சர் ஜெயக்குமாரின் படத்தை இரண்டு முறை போட்டு, அடுத்ததாக மழையில் இருவர் நனையும் படம், மற்றும் தாஜ்மஹால் படங்களை வரிசையாக வைத்து அந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படங்கள் சொல்லும் பாடல் என்ன என்றும் அதில் கேள்வி எழுப்பட்டிருந்தது. அதைப்பார்த்து அந்த பாடல் என்னவாக இருக்கும் என அமைச்சர் யோசிக்க தொடங்கியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் நமக்கு பகிர்ந்த வாட்ஸ்ஆப் செய்தி, " பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே விடுமுறை, ஜாலி எல்லாம் கலந்தது தானே. அப்படி என்னை மேலும் ஜாலியாக மாற்றி உள்ளது, கீழே உள்ள இந்த மீம்ஸ். என்னுடைய படத்தை போட்டு, அது எந்த பாடல் என்று ஒருவர் மீம்ஸ் போட்டுள்ளார். நானே யோசித்து பார்க்கிறேன், அது எந்த பாடலாக இருக்கும் என்று. இத்தகைய மீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக் கொள்வதே என்னுடைய குணம். இதற்காகவெல்லாம் வருத்தப்பட மாட்டேன்.
ஆனா, இதுபோன்ற மீம்ஸ்களுக்காக செலவிடும் நேரத்தில் ஆக்கபூர்வமான வேறு ஏதாவது பணிகளில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்பதே என்னுடைய அறிவுரை.
இருந்தாலும், இது எந்த பாடல் என்று யோசனை எனக்கு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன். தெரிந்து கொள்கிறேன்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications