கோவில் குளம் கண்டத்தில்ல இப்படி ஒரு "சாமி".. இது செமி பைனல் இல்லை "ஷமி" பைனல்.. அசர வைத்த மீம்ஸ்!
சென்னை: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் ஆட்டம் நேற்று விறுவிறுப்பாக சென்றது. நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை பைனல்ஸ் ஆட்டத்திற்கு சென்றுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவின் பவுலிங் படை கடுமையாக திணறிக்கொண்டு இருக்க.. முகமது ஷமி தனி ஆளாக 7 விக்கெட் எடுத்து மேட்சை மாற்றி உள்ளார். அவர் இல்லையென்றால்.. இனி இந்திய அணி வென்று இருக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்றது.

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செமி பைனலில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக.. அந்த காயங்களுக்கு மருந்து போடும் விதமாக இந்த போட்டியில் நேற்று இந்திய அணி வென்றுள்ளது. நேற்று மேட்சில் இந்தியா வெல்ல முக்கிய காரணம் ஷமி.
மீம்ஸ்: இது போக கோலி, ஷ்ரேயாஸ், ரோஹித், கில், கே எல் ராகுல் பேட்டிங். கடைசி கட்டத்தில் குல்தீப் வீசிய இரண்டு முக்கிய ஓவர்கள் பாராட்டப்பட்டு வருகின்றன. அதேபோல் சிராஜின் மோசமான ஓவர்களும் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது. இதை எல்லாம் வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

முக்கியமாக இது செமி பைனல் இல்லை..ஷமி பைனல் என்று கூறி வருகின்றனர். அதேபோல்.. கோவில் குளம் கண்டத்தில் இப்படி ஒரு "சாமி".. புண்ணியம்தான் செஞ்சுருக்கு தென்காசி பூமி என்று பாடல் போட்டும் ஷமியை சாமி போல கொண்டாடி வருகின்றனர்.
சிராஜ்தான் டிரம்ப் கார்ட் ஆனால் நமக்கு இல்லை.. நியூசிலாந்து டீமிற்கு என்றும் கிண்டல் செய்து மீம் போட்டு வருகின்றனர். அதேபோல் நியூசிலாந்து அணியின் மொத்த யுனிஃபார்மும் கருங்காலி மாலையில் செய்ததுதான் என்றும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

ஷமி பவுலிங்: நேற்று தொடக்கத்திலேயே ஷமி ஓவரில் நியூசிலாந்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 5.1 மற்றும் 7.4 ஓவரில் ஷமி பந்துகளில் தேவன் கான்வாய், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஆனால் அதன்பின் 73 பந்துகள் பிடித்த வில்லியம்சன் 69 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சதம் அடித்தும் மிட்சல் அவுட் ஆகாமல் பிரஷர் போட்டார்.

கேன் வில்லியம்சன் 69 ரன்களில் ஷமி ஓவரிலேயே அவுட் ஆனார். அதே ஓவரில் டாம் லாதாம் டக் அவுட் ஆனார். அந்த ஓவர்தான் ஆட்டத்தை இந்தியா பக்கம் திரும்பியது. பின்னர் கிளேன் பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்து பிரஷர் போட்டாலும் பும்ரா ஓவரில் ஜடேஜாவிடம் அவுட் ஆனார்.

அதன்பின் மார்க் சாப்மன் குல்தீப் ஓவரில் ஜடேஜாவிடம் மீண்டும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஷமி ஓவரில் மீண்டும் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து மிட்சல் 134 ரன்களுக்கு அவுட் ஆனார் பின்னர் கடைசியில் ஷமி வரிசையாக 2 விக்கெட் எடுக்க.. 327-10 ரன்கள் எடுத்து நியூசிலாந்து தோல்வி அடைந்தது. நேற்று ஷமி தனி ஆளாக 7 விக்கெட் எடுத்ததுதான் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக மாறியது. இதைத்தான் பலரும் பாராட்டி மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications