வெறும் காத்து தான் வருது... ஓ நாடா..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை வரும், கனமழை வரும் என ஆளாளுக்கு மிரட்டிக் கொண்டிருக்க, பேருக்கேற்ப பெருந்தன்மையோடு கடந்து சென்றது நாடா புயல்.

இதற்கிடையே நாடா புயல் குறித்து பல்வேறு பீதிகளுக்கு இடையே நெட்டிசன்கள் வழக்கம் போல் மீம்ஸ் போட்டு அதனை கலாய்த்துக் கொண்டு தான் இருந்தனர்.

அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

ஓ நாடா..

ஓ நாடா..

புயலுக்கு வெளிநாட்டு அர்த்தப்படி பேர் வைத்தாலும், நம்மூரில் இதன் அர்த்தம் வேறு தான். எனவே அதை வைத்து உருவாக்கப்பட்ட மீம் இது.

வெறும் காத்து தான் வருது...

வெறும் காத்து தான் வருது...

மழை வரும் என எதிர்பார்த்தவர்களுக்கு வெறும் காற்றையும், சில இடங்களில் வெயிலையும் தந்து வெறுப்பேற்றியது நாடா. அதன் வெளிப்பாடு தான் இது.

என்ன பண்ணப் போறோமோ..?

என்ன பண்ணப் போறோமோ..?

கடந்தாண்டு வெள்ளத்தின் போது, பாதிக்கப்பட்ட தலைநகர் சென்னைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிகள் குவிந்தன. ஆனால் இப்போது மத்திய அரசின் புண்ணியத்தால் எல்லா மாவட்ட மக்களுமே சில்லறைத் தட்டுப்பாட்டில் தான் சிக்கி வருகின்றனர். தனக்கு மிஞ்சி தானே தானமும், தர்மமும்.

வீட்லயே இருங்க...

வீட்லயே இருங்க...

புயல், மழை, கனமழை, வெள்ளம், பலத்த காற்று என நாலா பக்கத்தில் இருந்தும் மிரட்டல்கள் வருவதால், சென்னை மக்கள் வீட்டுக்குள்ளேயே இருத்தல் நலம் என்கிறது இந்த மீம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
These are some memes on NADA cyclone and rain.
Please Wait while comments are loading...