கொளுத்தும் வெயிலில் சந்திரமுகியாகிப் போகும் நம்மூர் பெண்கள்!
சென்னை: சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது வெயில் அடிக்கக் கூடாதா என்று பிரார்த்தனை செய்த அதே மக்கள் இன்று மழை பெய்யாதா என்று எதிர்பார்த்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் தேர்தல் பற்றிய மீம்ஸ்கள் அதிக அளவில் வெளியிடப்பட்டு வருகின்றது. அதே போன்று வெயிலின் தாக்கம் குறித்தும் பல மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றது. இந்த ஆண்டு கத்திரி வெயில் காலம் துவங்கும் முன்பே வெயில் மண்டையை பிளக்கிறது.
இந்நிலையில் தான் பலர் வெயில் பற்றி மீம்ஸ் போடுகிறார்கள்.

கொதிக்குது
வெயிலில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திச் சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து சீட்டில் அமர்பவர்களின் சீட் வெந்துபோகும் அளவுக்கு சூரியன் சுட்டெரிக்கிறது.

தண்ணீர் வேணும்
கிரிக்கெட் விளைாடாமல் பந்து பட்டும் மெடுலா ஆம்லங்கேட்டாவில் அடிபடாமலேயே வெயிலால் பலருக்கு ஞாபக மறதி ஏற்படும் போல் உள்ளது.

மழை
இருக்கும் மரங்களையெல்லாம் வெட்டிக் கொண்டு மழை வேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்களுக்காக நச்சென்று போடப்பட்டுள்ள மீம்ஸ்.

ஹீட்டர் வேண்டாம்
வெயில் படுமோசமாக இருப்பதால் ஹீட்டர் இல்லாமலேயே தண்ணீர் சூடாக உள்ளது. சொல்லப் போனால் மதிய வேளையில் குழாயை திறந்தால் தண்ணீர் கொதிக்கிறது. அதில் குளித்தால் தோல் காலி.

ஹெல்மெட்
இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கோடையில் வெகுதூரம் சென்றுவிட்டு ஹெல்மெட்டை கழற்றினால் அவரவர் இந்த படத்தில் உள்ளது போன்று தான் உணர்கிறார்கள்.

வெயில் வேணும்னு
சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது சூரிய பகவானே கொஞ்சம் கருணை காட்டுப்பா என்று வெயிலை காண ஆவலாக இருந்த அதே மக்கள் இன்று மழையை எதிர்பார்க்கிறார்கள்.

கோடை
வெளிநாட்டவர்கள் கோடை காலத்தை எப்படி பார்க்கிறார்கள், இந்திய பெண்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அழகாக மீம்ஸ் போட்டு தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications