அவ்வளவுதான் உனக்கு லிமிட்.. கடுப்பான அமீர், கனி.. சுதாவை கோர்த்துவிட்ட ஞானவேல் ராஜா.. டிரெண்டான மீம்
சென்னை: ஞானவேல் ராஜா - அமீர் - சமுத்திரக்கனி - சுதா கொங்கரா மோதல் குறித்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படத்தின் இயக்குனர் அமீர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். அமீர் அதிக செலவு செய்தார், படத்தின் காசை திருடினார். அது எனக்கு முதல் படம். ஆனால் நான் கொடுத்த காசை வைத்து படத்தை எடுக்காமல் பணத்தை திருடிவிட்டார் என்று குற்றச்சாட்டு வைத்து.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் அமீர் விளக்கமளித்துள்ளார். அதில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கும் பரப்பிய அவதூறுகளுக்கும் என்னைப் பற்றிக் கூறிய வரம்ய வார்த்தைகளுக்கும் உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கும் பதிலளிக்க கோரி என்னிடம் தொடர்ந்து கட்டுக் கொண்டிருக்க கூடிய அனைத்து ஊடக நண்பர்களுக்காகவே இந்த அறிக்கை.
இது தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால் வழக்கறிஞரின் அறித்தலின் பேரிலேயே நான் இன்னும் பதிலளிக்காமல் இருக்கிறேன். அதன் காரணமாகவே, நண்பர்களைச் சந்திக்காமலும் இருக்கிறேன் இதில் வேறு எந்த காரணமும் கிடையாது இருந்தாலும் தொடர்ச்சியாக இப்பிரச்னை YOUTUBE உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால், சிவ விளக்கங்களை அளிக்க நான் விரும்புகிறேன்.
நாங்க சாட்சியா இருக்க சொல்லவே எங்க அண்ணே அமீர் மேல இவ்வளவு பழி போடுறியே யோவ் ஞானவேல் அவ்வளவுதான் உனக்கு லிமிட்..
— ஷேக்பரித் (@FareethS) November 26, 2023
- சசிகுமார் & சமூத்திரக்கனி அறிக்கை pic.twitter.com/5vHhwKQxUf
என்ன சொன்னார் ?: "பருத்திவீரன்" தொடர்பாகவும் என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும் ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில் அனைத்தும் புனையப்பட்ட பொய்கள். இது முழுக்க முழுக்க சமூகத்தில் எனக்கு இருக்கும் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்தோடும் திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடைசெய்யும் தோக்கத்தோடும் இட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப்பிரசாரமே.
"பருத்திவீரன்" திரைப்படம் தொடர்பாக எனக்கும் ஞானவேல்ராஜா அவர்களுக்கும் இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் போடப்படவில்வை. எனவே இல்லாக ஒப்பந்தத்தை தான் மீறவும் இல்லை படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புக்கு அவர் வழங்கிய தொகையைத் தவிர அடுத்தடுத்து காலகட்டங்களில் படப்பிடிப்புக்கான தொகையைத் தராமல் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு காணமல் போனவர் அவர் அதன் பின்னரே, நான் எனது TEAMWORK PRODUCTION HOUSE" நிறுவனத்தின் மூலம் அந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்தேன்.
சுதா & கோ ~ அமீர் அண்ணே, அன்னைக்கு உங்களுக்கு மேக்கிங் வரலன்னு சொல்லட்டு, இப்போ திடீர்னு பாராட்டுறதால ஏதும் தப்பா நினைச்சிட்டீங்களா?
— ஜோ...😎😎 (@ItsElonmuskk) November 26, 2023
~ சே, சே.. சினிபீல்ட்ல இந்த மாதிரி சில்லறைத்தனம்லாம் சாதாரணம். pic.twitter.com/VENcCjlxgV
மேலும், "பருத்திவீரன் படப்பிடிப்புச் சூழல் முழுவதையும் முற்றாக அறித்த இன்றைக்கு திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் என் சகோதரர்களும், பணியாற்றிய அனைந்து தொழில்நுட்ப கலைஞர்களும் இப்பிரச்னையில், அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது, என்று கூறினார்.
சமுத்திரக்கனி அறிக்கை: சமுத்திரகனி வெளியிட்டுள்ள அறிக்கையில், திரு ஞானவேல்ராஜாவுக்கு என குறிப்பிட்டுள்ள சமுத்திரகனி, அமீர் அண்ணன பத்தி நீங்க பேசுன வீடியோவ இப்பதான் பார்த்தேன். ரொம்ப தப்பு பண்ணிட்டு இருக்கீங்க ப்ரோ. தப்பு தப்பா பேசிருக்கீங்க. கேக்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஏன் சொல்றேன்னா... அந்த படத்துல ஆரம்பத்துல இருந்து கடைசிவரைக்கும் இருந்தவன் நான். எல்லா பிரச்சினையும் எனக்குத் தெரியும்.
ஆறுமாசம் பருத்திவீரன் படப்பிடிப்பிலேயே இருந்துருக்கேன். ஆனா உங்கள ஒருநாள் கூட அங்க பார்த்தது இல்ல. நான் தான் தயாரிப்பாளர் நான் தான் தயாரிப்பாளர்ன்னு பேசிட்டே இருக்கீங்க. உங்கள தயாரிப்பாளர் ஆக்கினது, கார்த்திய ஹீரோ ஆக்கினது அந்த மனுஷன். எந்த நன்றி விசுவாசமும் இல்லாம பேசி இருக்கீங்க ப்ரதர். தப்பில்லையா? எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்? பருத்திவீரன் சம்பந்தமான பிரச்சினைகள் வரும்போதெல்லாம் சரி நமக்கெதுக்கு அவங்களே பேசிக்குவாங்க... அவங்களே தீத்துக்குவாங்க அப்படின்னு தான் இருந்தேன், என்று கூறியுள்ளார்.
அமீர் அண்ணா.. உன்னை நினைக்கயில் எத்தனை சுகமான நினைவுகள் !!#Ameer#Paruthiveeran https://t.co/eJmTQVWm5r pic.twitter.com/XxonsVKOkL
— Cinephile (@shiv_kmrn) November 26, 2023
சுதா கொங்காரா: இந்த நிலையில் அமீருக்கு ஆதரவாக பலரும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் சுதா கொங்காரா.. ராம் படம் நன்றாக இல்லை என்று கூறியதாக ஞானவேல் ராஜா புதிய பேட்டி கொடுத்து சுதாவை கோர்த்து விட்டுள்ளார்.
இந்த நிலையில் சுதா கொங்காரா தனக்கு பருத்திவீரன் படம் மிகவும் பிடிக்கும் என்றும் முத்தழகு கேரக்டர் பிடிக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் ராம் படத்தை பற்றி அவர் பேசவில்லை. இதை எல்லாம் குறிப்பிட்டு நெட்டிசன்கள் தற்போது மீம்ஸ் போட்டு வருகின்றனர். எல்லோருடைய ஸ்டேட்மென்ட்டையும் கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications