பத்தாங்கிளாஸ் பெயிலானா என்ன 7வது பாஸாயிட்டோம்ல.. தெறிக்கும் கிரிக்கெட் மீம்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் மீம்கள் தெறிக்கின்றன.

பாகிஸ்தானை கிண்டல் செய்தது, பிறகு இந்தியாவை கிண்டல் செய்தது, ஹாக்கிதான் நமது விளையாட்டு என கூறி வலிக்கு மருந்து தேடியது என பல வகை மீம்கள் சோஷியல் மீடியாக்களில் கிடைக்கின்றன.

அப்படி கண்ணில் பட்ட மீம்களின் தொகுப்பை பாருங்கள்.

ஹாக்கிதான்

கிரிக்கெட்ட விடுங்க. ஹாக்கிதான் எல்லாம். பேட்டை செதுக்கி, ஹாக்கி மட்டையாக மாற்றுங்க மக்களே.

நமது செய்திதான்

ஏன்னா உன்னைய அப்பிடி பழக்க படுத்தி வெச்சிருந்தான் கங்குலி 😂😂😂 தியாகம் பண்ணலைனா வாய்லயே மிதிப்பான், என லட்சுமணன் குறித்த நமது செய்தியை பார்த்து கூறுகிறது இந்த டிவிட்.

தகுதியில்லை

தோல்வியின்போது ஆதரவு அளிக்காவிட்டால், அந்த அணி வெற்றி பெறும்போதும் ஆதரவு அளிக்க உங்களுக்கு தகுதியில்லை என்கிறது இந்த டிவிட்.

ஓங்கி உதைச்சி அனுப்பிட்டாங்க

வடிவேலுவின் இந்த மிதி யாருக்குன்னு நாங்க சொல்லனுமா என்ன. உங்களுக்கே தெரியுமே. பாண்ட்யாவ ரன்அவுட் பண்ணியது யாருன்னு சின்ன குழந்தைக்குகூட தெரியும் என்பதே புதுமொழி.

கொஞ்சம் ஓவராத்தான் போயிருக்காங்க

அவனுங்கள 250ல ஆல்அவுட் ஆக்கி ஜெயிக்கிறதுல என்ன கிக்கு இருக்கு?400க்கு மேல அடிக்கவிட்டு ஜெயிக்கிறதுதான் கிக்கு.. இப்படி சொல்லி இந்திய பவுலிங்கிற்கு கவுண்மணி போல முட்டுக்கொடுத்தது இந்தடிவிட்.

வருத்தமில்லங்க

பாகிஸ்தானை கொள்கையில் கோட்பாடில் ஏன் போரில் வெல்வதே உண்மையான வெற்றி.விளையாட்டு தோத்தா வருத்தப்படமாட்டோம்..

விக்கெட் உழமாட்டுதும்மா.. என சமாளிக்கிறது இந்த மீம்.

ஹாக்கியில் வெற்றி

பத்தாவது ஃபெயிலானா என்ன, ஏழாவது பாஸாயிட்டோம், போடா போடா

எட்டு பேட்ஸ்மேன்கள் இருந்தாங்களே

எட்டு பேட்ஸ்மேன வச்சுக்கிட்டு, எழவு இந்த ஸ்கோர அடிக்கலன்னா எதுக்கு கிரிக்கெட்டுங்கிறேன்?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes on the round as Pakistan won Champions Trophy final against India.
Please Wait while comments are loading...