சார் இந்த தண்ணி லாரி டிரைவர விட்டுட்டீங்க...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசுப் பேருந்துகளை ஓட்ட மணல் லாரி ஓட்டுநர்களுக்கு அரசு தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஸ்ட்ரைக் காரணமாக தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் அரசுப் பேருந்துகளை இயக்க மணல் லாரி ஓட்டுநர்களை அதிகாரிகள் நிர்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது.

அரசு பேருந்துகளை இயக்கினால்தான் மணல் அள்ள டோக்கன் அளிக்கப்படும் என்று மணல் லாரி ஓட்டுநர்களை ஆர்டிஓ மிரட்டுவதாக டிரைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏற்கனவே மணல் லாரிகளால் விபத்துகள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தற்போது மணல் லாரி ஓட்டுநர்களை வைத்து அரசுப் பேருந்துகளை வைத்து தமிழக அரசு, பேருந்துகளை இயக்க முயற்சிப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அதை விட்டுட்டீங்க..

சார் இந்த தண்ணிலாரி டிரைவர விட்டுட்டீங்க...! என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..

பழக்கதோஷத்தில்..

பழக்கதோஷத்தில் வேகமா ஓட்டி எதிரில் வருபவர்களை ஏற்றி சாவடிக்காமல் இருக்கனுமே என தனது அச்சத்தை வெளிப்படுத்துகிறார் இந்த நெட்டிசன்..

கம்மி பண்ண போறாங்களா?

மக்கள் தொகைய கம்மி பண்ண போறாங்களா?? என பீதியில் கேட்கிறார் இந்த வலைஞர்...

அவர்களையும் கூப்பிடலாம்..

மாநகராட்சி குப்பை லாரி டிரைவர்களையும் கூப்பிடலாம்... என அரசுக்கு ஆலோசனை வழங்குவதுப் போல் கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்

பஸ் ஓடுனா போதுமா?

அப்போ மக்கள் பற்றி கவலை இல்லை யார் செத்தாலும் பரவாயில்லை பஸ் ஓடுனா போதுமா? என்று கேட்கிறார் இந்த வலைஞர்..

ரோட்டுக்கு வராதீங்க

உயிரே போனாலும் கொஞ்ச நாளைக்கு ரோட்டுக்கு வராதீங்க மக்களே... வாழ்வதற்கு உயிர் முக்கியம்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sandy truck drivers have been informed that the government has been invited to run buses. People are afraid of this.
Please Wait while comments are loading...