பணத்திமிர்ல சொல்றேன்னு நினைக்காதீங்க.. இன்னிக்கு எங்க வீட்டில் தக்காளி சட்னி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் தக்காளியின் விளைச்சல் குறைந்துள்ளதால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த வாரம் மும்பையில் 300 கிலோ தக்காளி திருடு போனதை அடுத்து வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக இணையதளத்தில் மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ்களை தொகுத்து உலவ விட்டு வருகின்றனர். அவற்றில் சில உங்களுக்கு...

ஆள்கடத்தல்

தக்காளிக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு. பாத்து மக்களே நெறையா தக்காளி கேட்டு ஆள் கடத்தல் நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்ல.

மீத்தேன் கண்டுபிடிக்கும்போது

பூமிக்கடில 1000அடி ஆழத்துல மீத்தேன் கண்டுபிடிக்கிற டிஜிட்டல் இந்தியால பூமிக்கு மேலயே தக்காளி ஏன் விளையலைன்னு கண்டுபிடிக்க முடியல.

தங்கமும், தக்காளியும்...

தங்கத்தை போன்று பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொருள் தக்காளி என்பதை உணர்த்துகிறது இந்த படம்.

நிலத்துக்கு பாதுகாப்பு இல்லை

தக்காளிக்கு போலீஸ் பாதுகாப்பு. தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, நிலத்திற்கு பாதுகாப்பு இல்லை.

அதுக்காக இதெல்லாம் ஓவர்

தக்காளி விலை கிராக்கி தான்! அதுக்காக துப்பாக்கியா!!!😂

1 Kg Tomato rs.80 and 1 Kg onion rs.60-Oneindia Tamil

பணத்திமிருனு நினைக்காதீங்க...

*Season joke😜*

நான் இதைச் சொன்னால்
பணத்திமிர்ல பேசறேன்னு
சொல்லுவாங்க...!!!

இருந்தாலும் சொல்றேன்..
இன்றைக்கு என் வீட்டில் - தக்காளி சட்னி

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As the production of tomatoes cut short, the price touches the sky. So Memes creators have not leave this tomato also.
Please Wait while comments are loading...