"லவ்வர்ஸ் டே"... ‘நமக்கு நாமே’ தான் சரி... மீம்ஸ் மூலம் தேற்றிக் கொள்ளும் இளைஞர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலர்களின் பண்டிகையான காதலர் தினம் வரும் ஞாயிறன்று கொண்டாடப்பட உள்ளது. காதல் பரிசாக தனது துணைக்கு என்ன தரலாம் என காதலர்கள் யோசித்து அன்புப் பரிசுகளை வாங்கி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, இன்னும் காதலில் விழாத (யாராச்சும் வந்தாதானே விழறதுக்கு) வருத்தப்படாத வாலிபர் சங்க இளைஞர்களாக சிலர் வேதனையில் வெம்பி வருகின்றனர். புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்றுவது போல், தங்களது சோகத்தை மீம்ஸ் வெளியிட்டு தேற்றிக் கொள்கின்றனர் இவர்கள்.

இப்படியாக இணையத்தில் உலவும் சில மீம்ஸ்கள் நம் கண்ணுக்குச் சிக்கியது. இதோ அவை உங்களுக்காக...

காசு, பணம், துட்டு...

காசு, பணம், துட்டு...

காதலர் தினத்தன்று நேரில் சந்தித்துக் கொள்ள முடியாதவர்கள், ஒரு நாள் முன்கூட்டியே வாழ்த்தி விடுங்கள் என்கிறது இந்த மீம்ஸ். காரணம் அன்று எஸ்.எம்.எஸ்க்கு காசு, பணம், துட்டு, மணி...

என்னமோ போடா மாதவா...

என்னமோ போடா மாதவா...

இன்னமும் காதலி கிடைக்காத இளைஞர்களின் வேதனையைச் சொல்கிறது இந்த மீம்ஸ். நீயும் அழகாத்தாண்டா இருக்க, ஆனாலும் ஏன் ஒரு பொண்ணு கூட உன்னை லவ் பண்ண மாட்டேங்குது. என்னமோ போடா மாதவா.

ஹைப்போதெடிக்கல் கொஸ்டீன்...

ஹைப்போதெடிக்கல் கொஸ்டீன்...

காதலில் விழுந்த இளைஞர்களுக்கு, காதலியைத் தேடி வருபவர்களைக் கண்டாலே எப்போதும் இளக்காரம் தான் என்கிறது இந்த மீம்ஸ்.

காத்திட்டு இருக்கேன்...

காத்திட்டு இருக்கேன்...

ஆசை பட அஜீத் போல இளமையாக இருந்த காலத்தில் இருந்து, வீரம் பட அஜீத் போல் தலையெல்லாம் நரைத்த நிலையிலும் இன்னும் சிலர் காதலில் விழ காத்திருக்கிறார்களாம். இதை சிம்பாளிக்காகச் சொல்கிறது இந்த மீம்ஸ்.

காதலி கிடைத்தால் மொட்டை...

காதலி கிடைத்தால் மொட்டை...

காதல் என்று வந்தாலே முதலில் பலி கொடுக்கப்படுவது நட்பு தான் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. ஆனால், இந்த மீம்ஸ்-ல் காதலி கிடைத்தால் பிரண்டுக்கு மொட்டை போடுவேன் என்கிறார்கள்.

என்னத்த...

என்னத்த...

இவர் கவலையைப் பாருங்க. பொண்ணுங்க கூட பேசவேத் தெரியலை இதுல எப்டி லவ் பண்ணி, லவ்வர்ஸ்டே கொண்டாடுறதுனு கேட்குறாரு.

என் வழி தனி வழி...

என் வழி தனி வழி...

எல்லோரும் காதலர் தினத்தன்று தனது துணைக்கு வாழ்த்துப் பரிமாறிக் கொண்டிருக்க, காதலி கிடைக்காதவர்களின் நிலை இது தானாம்.

நமக்கு நாமே...

நமக்கு நாமே...

பெரும்பாலான படங்களில் கோவில் படக்காட்சிகள் வருகிறதென்றால், நிச்சயம் காதலி ஓடிவந்து காதலனின் நெற்றியில் விபூதி பூசும் காட்சி இருக்கும். காதலி இல்லாதவர்களுக்கு... நமக்கு நாமே தான்.

ராக்கி கட்டவே ஆளில்லை...

ராக்கி கட்டவே ஆளில்லை...

இந்த மீம்ஸ் ஆஹா ரகம். ராக்கி கட்டவே யாரும் இல்லை, இதில் காதலியை எங்கே போய் தேடுவது என மறைமுகமாகச் சொல்கிறது இந்த மீம்ஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+