காக்கி நாடா உங்களுக்கு.. பாவாட நாடா எங்களுக்கு!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் இரு கோஷ்டிகளும் தற்போது ஒன்றாக இணைவது குறித்து பல்வேறு மீம்ஸ்களை போட்டுத் தாக்கி வருகின்றனர் மக்கள்.

அதிமுகவின் இரு பிரிவுகளும் இணைவதை மக்கள் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். இதற்குத்தானா இத்தனை டிராமாக்கள் என்ற திட்டல்களும் கொட்டத் தொடங்கியுள்ளன.

இதுதொடர்பாக உலவி வரும் மீம்ஸ்கள் சிலவற்றை உங்கள் பார்வைக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

காக்கி நாடா உங்களுக்கு...

காக்கி நாடா உங்களுக்கு...

டிடிவி தினகரன் ரொம்ப டென்சன் ஆனா சமாதில தியானம் பண்ணுவாராம்... தொகுதிய பிரிச்சுக்குவோம், காக்கிநாடா உன்னுது... பாவாட நாடா என்னுது... குண்டூர் உன்னுது... நெல்லூர் என்னுது- ஓபிஎஸ்.

மூணு முடிச்சால் வந்த வினை

மூணு முடிச்சால் வந்த வினை

தீபாவுக்கும் அவரது கணவருக்கும் குடிமிப்பிடி சண்டை, ஆதரவாளர்களிடையே மோதல் தீபாவின் வீட்டில் நுழைய மாதவனுக்கு தடை மூணு முடிச்சால முட்டாள ஆனேன் கேளு கேளு தம்பி... நான் இருந்தேன் வீட்டுக்குள்ளே.. இப்ப விழுந்தேன் ரோட்டு மேல...

 ப்ப்பா கடலை ஒட்டி... இப்ப கடலுக்குள்ளயா...

ப்ப்பா கடலை ஒட்டி... இப்ப கடலுக்குள்ளயா...

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு போர்க் கப்பலை சுற்றி பார்க்க அழைப்பு. ப்பா, செம்ம... போன தடவை கடலை ஒட்டி கூவத்தூர் ரிசார்ட், இப்ப கடலுக்குள்ளயேவா.

 டோக்கன் போட்டா கலெக்ஷன் களைகட்டும்...

டோக்கன் போட்டா கலெக்ஷன் களைகட்டும்...

போற போக்க பாத்த எல்லாரும் ஜெ.சமாதில நிறைய பேர் தியானம் பண்ணுவாங்க போல, நம்ம வேனா டோக்கன் போடலாம், செம கலெக்ஷன் பார்க்கலாம்.

ஏன் வாண்டட்டா வந்து வம்பு பண்ற...

ஏன் வாண்டட்டா வந்து வம்பு பண்ற...

போகிற போக்கில் திமுகவையும் ஒரு தட்டு தட்டி விட்டுப் போயுள்ளனர் இந்த மீம்ஸ் குறும்பர்கள்.

செம என்டர்டெயின்மென்ட்

செம என்டர்டெயின்மென்ட்

அதிமுக எம்எல்ஏ-க்கள் சென்னைக்கு வர அழைப்பு. பங்கு பங்கு அங்க பாரு நமக்கு செம என்டர்டெயின்மென்ட் வந்துட்டு இருக்கு.

கச்சதீவை விட்டுட்டு

கச்சதீவை விட்டுட்டு

இரு அணிகளும் ஒன்றாக இணைந்து இரட்டை இலையை மீட்டெடுப்போம்- அமைச்சர் ஜெயகுமார் பேட்டி. கச்சதீவு, விவசாயிகள், மீனவர்கள் காவிரி... இவைகளை எல்லாம் விட்டுட்டு சின்னத்தை மீட்கிறார்களாம்.

பேசி தீர்த்துகலாம்

பேசி தீர்த்துகலாம்

தீபாவின் கணவர் மாதவன் ஏப்ரல் 21-ஆம் தேதி புதிய கட்சி தொடங்குகிறார்.

பொண்டாட்டி கூட ஏதாவது பிரச்சினைன்னா உக்காந்து பேசி சுமுகமாக தீர்க்க பார்க்கணும். அதவிட்டுட்டு இப்படி கொள்கையே இல்லாம கட்சியெல்லாம் ஆரம்பிக்கக் கூடாது.

விபூதி அடிச்சீங்களா

விபூதி அடிச்சீங்களா

அதிமுகவின் இரு அணிகளிலும் உள்ள பிரச்சினை அண்ணன் தம்பி சண்டை போன்றது - அமைச்சர் வேலுமணி.

அப்ப இவ்வளவு நாள் எங்களுக்கு விபூதி அடிச்சுக்கிட்டு இருந்தீங்க.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes creators are creating memes on ADMK unity and Deepa family problems.
Please Wait while comments are loading...