"என் அப்பா தோக்கல".. 10 தடவை பார்த்தும் கலங்குறேன்.. கண்ணீர்விட வைத்த நீயா நானா! டிரெண்டாகும் மீம்ஸ்
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில் நடைபெற்ற சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்கள் முழுக்க விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை வைத்து பலரும் மீம்ஸும் போட்டு வருகின்றனர்.
பொதுவாக விஜய் டிவியில் யா நானாவில் விவாதிக்கப்படும் சில விஷயங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அவவ்போது பெரிய விவாதங்களை ஏற்படுத்தும். நெட்டிசன்கள் பலர் இதை வைத்து கடுமையான ஆக்கபூர்வமான விவாதங்களை இதற்கு முன் செய்துள்ளனர்.
அதேபோல் இன்றைய எபிசோடில் விவாதிக்கப்பட்ட விஷயங்களும் அதிகம் கவனிக்கப்பட்டன. கணவன் vs கணவனை விட அதிகம் வருமானம் ஈட்டும் மனைவிமார்களுக்கு இடையில் இன்றைய விவாதம் நடைபெற்றது.
இன்றைய விவாதத்தை கோபிநாத் கையாண்ட விதம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

விவாதம்
பல உணர்ச்சிகரமான இடங்களை இந்த விவாதம் தொட்டு சென்றது. மனைவிகள் குடும்பத்தை தனியாக காப்பது எப்படி, சில கணவர்கள் மனைவி வருமானத்திலும் ஆன்லைன் ரம்மி ஆடுவது, வருமானம் ஈட்டாத ஆண் வீட்டில் படும் அவமானம் என்று பல விஷயங்களை இந்த எபிசோட் தொட்டு சென்றது. இதில் வந்த ஆண் ஒருவரை அவரின் மனைவி.. குழந்தைக்கு மார்க் சீட்டில் கையெழுத்து போட்டால் என் கணவர் அப்செட் ஆகிவிடுவார்.

கணவர்
என் கணவருக்கு எழுத படிக்க தெரியாது. ஆனாலும் அவர் மார்க் சீட்டை 1 மணி நேரம் பார்க்கிறார் என்று கூறினார். இதற்கு அந்த கணவர்.. என்னால் படிக்க முடியவில்லை, நான் செய்ய முடியாத சாதனையை என் மகள் செய்கிறார். அதனால் பார்க்கிறேன் என்று விளக்கம் கொடுத்தார். இதை கேட்ட கோபிநாத் அவர் தன் மகளின் சாதனையை பார்த்து பூரித்து போய் உள்ளார். இதில் என்ன தவறு இருக்க முடியும். இதை ஏன் தவறு என்று சொல்கிறீர்கள்.

சோஷியல் சைன்ஸ்
என் கணவருக்கு எதுவுமே தெரியாது. அவருக்கு மார்க் சீட்டில் என்ன இருக்கிறது என்றே தெரியாது. அவர் 1 மணி நேரம் ஏன் இதை பார்க்க வேண்டும், என்று கேட்கிறார். இதற்கு பதிலுக்கு கோபிநாத்.. அவரால் சாதிக்க முடியவில்லை. அபப்டி இருக்கும் போது மகள் செய்த சாதனையை அவர் கொண்டாடுகிறார். இதை நீங்கள் யோசித்தால் இல்லையா? அவர் ஏன் 1 மணி நேரம் அப்படி பார்க்கிறார் என்று யோசிக்கவில்லையா? ஒரு மார்க் சீட்டில் 1 மணி நேரம் பார்க்க என்ன இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கவில்லையா?

மார்க் சீட்
ஒரு மனுஷன் இப்படி கொண்டாடுகிறார் என்று நினைக்கவில்லையா? என்று பதிலுக்கு கேட்கிறார். அதற்கு அந்த மனைவி திமிராக.. என் கணவர் ஏபிசிடியை எழுத்துக்கூட்டி படித்துக்கொண்டு இருப்பார் என்று சொல்லிவிட்டு கிண்டலாக சிரித்தார். இதையடுத்து கோபமாக ரியாக்சன் கொடுத்த கோபிநாத், எல்லோருக்கும் எல்லாமும் தெரியாது. சந்தோசமாக இருக்க எல்லாம் படித்து இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தான் விட்டதை மகள் பிடித்துவிட்டதை பார்த்து சந்தோசப்படும் தந்தை எனக்கு காவியமாக தெரிகிறார், என்று கோபிநாத் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேச்சு
ஆனால் தொடர்ந்து விடாமல் பேசிய அந்த பெண்.. என் கணவர் இன்னும் 90 களிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார், என்று கிண்டலாக மீண்டும் கூறினார். இதையும் கூட அவரின் கணவர் சிரித்தபடியே வெள்ளந்தியாக கேட்டுக்கொண்டு இருந்தார். இதையடுத்து விஷயத்தை கையில் எடுத்துக்கொண்ட கோபிநாத்.. நிகழ்ச்சியின் இறுதியில் கொடுக்க வேண்டிய பரிசை பாதியிலேயே அந்த கணவருக்கு கொடுத்து பாராட்டினார்.

அப்பா
நீங்கள் சிறந்த அப்பா என்றும் அவரை கோபிநாத் பாராட்டினார். இதையடுத்து தனது மகளிடம் இருந்து அவரின் அப்பா பரிசை வாங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எங்கப்பா நெஜமாவே தோக்கல. அவரு எனக்காகதான் கஷ்டப்படறாரு. அவரு படிக்கல, நான் நல்லா படிக்கனும்னு அவருக்கு ஆசை, என்று அவரின் மகளும் பேசியது இணையத்தையே உலுக்கி உள்ளது. இவர்களின் உரையாடல் இணையம் முழுக்க வைரலாகி வரும் நிலையில் பலர் இதை வைத்து போஸ்டுகளையும், மீம்ஸ்களையும் போட்டு வருகிறார்கள்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications