‘அவசரப்பட்டுட்டியே குமாரு’.. பொண்டாட்டியை மட்டும் பகைச்சிக்காதீங்க.. என்ன நடக்கும்.. மீம்ஸ் வீடியோ
சென்னை: உங்கள் பொண்டாட்டியை மட்டும் எந்த காரணம் கொண்டு பகைத்துக் கொள்ளாதீர்கள்.. அப்படி முறைத்துக் கொண்டு ஈகோவில் நின்றால் பின் விளைவுகள் வேறுமாதிரி இருக்கும். இது தொடர்பான வேடிக்கையான மீம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கணவன் மனைவி உறவை சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
கணவன் மனைவி உறவு என்பது மற்ற உறவுகளைவிட மிகவும் புனிதமானது. மற்ற உறவுகள் எல்லாம் இரத்த சம்பந்த உறவுகளாகவும், சிறுவயதில் இருந்து பார்த்து வளர்ந்த உறவுகளாகவும் இருக்கும். ஆனால் கணவன் மனைவி உறவை பொறுத்தவரை நேற்று வரை யார் என்றே தெரியாத ஒருவரை திருமணம் செய்து அவரை புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்தும், உணர்வுளுக்கு பரஸ்பரம் மரியாதை அளித்தும், காதலித்தும், திகட்டாத அன்பை பரிமாறும் உறவாக இருக்க வேண்டும்.

ஆனால் ரியாலிட்டி என்னவோ வேறுமாதிரி தான் இருக்கிறது. கணவனோ அல்லது மனைவியோ யாரே ஒருவர் இன்னொருவருக்கு காலம் முழுவதும் விட்டுக்கொடுத்து செல்லும் நிலையே இருக்கிறது. ஒன்று மனைவி சொல்வதே வீட்டில் ஆட்சியாக இருக்கும். அல்லது கணவன் சொல்வதே வீட்டில் ஆட்சியாக இருக்கும். அதாவது மனைவியின் கட்டுப்பாட்டில் வீடு இருக்கும்.. அல்லது கணவன் கட்டுப்பாட்டில் வீடு இருக்கும்.
பொதுவாக நன்கு படிதத்து, நல்ல வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ள வீடு மற்றும் கணவன் மனைவியிடையே புரிதல் அதிகம் உள்ள வீடுகளில் மனைவிதான் வீட்டின் முழு நிர்வாகத்தை பார்ப்பதாக உள்ளது. குறிப்பாக கடந்த 15 வருடங்களில் பெண்களே வீட்டின் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் வேலை செய்வோரின் வாழ்க்கை முறையே அடியோடு மாறிக்கிடக்கிறது. இந்த சூழலில் மனைவி சொல் பேச்சு கேட்டு நடக்க வேண்டும்.
மாறாக அவர்களை கோபத்தில் கடுமையாக திட்டினாலோ அல்லது கோப சண்டையில், நீ என்ன பெரிய ஆளா என்று முறைத்துக் கொண்டால் கடைசியில் காலில் விழுந்து சரண் அடையும் நிலை கூட சிலருக்கு ஏற்படுகிறது. பல வீடுகளில் நிலைமையே மாறிக்கிடக்கிறது. இந்த சூழலில் உங்கள் பொண்டாட்டியை மட்டும் எந்த காரணம் கொண்டு பகைத்துக்கொள்ளாதீர்கள்.. அப்படி முறைத்துக் கொண்டு ஈகோவில் நின்றால் பின் விளைவுகள் வேறுமாதிரி இருக்கும் என்று கிண்டல் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பெண் ஒருவர்.
மீம்ஸ் வடிவில் வெளியாகி உள்ள அந்த வீடியாவில் உள்ள பெண், இன்றைக்கு காலையில் எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் ரொம்ப பெரிய சண்டை.. சண்டையில் ரொம்ப திமிரா கேட்கிறார்.. உன்னால் என்னடி பண்ண முடியும்.. என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க போ என்று கூறினார்.. ஐந்து மணி நேரம் ஆச்சு.. இந்த சார்ஜரை (ஜபோன் சார்ஜர்) தேடிக்கொண்டிருக்கிறார். என்கிட்ட கேட்க மாட்டார்.. கேட்டால் ஈகே பிராப்ளம்.. என்னால் என்ன பண்ண முடியும்.. என்னால் இதான் பண்ண முடியும்" என்று கூறி வீடியோவை நிறைவு செய்கிறார்.
பொண்டாட்டிய மட்டும் பகைச்சிக்காதீங்க pic.twitter.com/YrgmMTaayg
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) May 29, 2024
இது கேலிக்காக எடுக்கப்பட்ட ஸ்கிரிட் வீடியோ என்கிற போதிலும்.. இதை மீம்ஸ் வீடியோவாக வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள். இதை பார்த்த நெட்டிசன் ஒருவர் புது சார்ஜர் வாங்கிகொள்ளலாமே என்கிறார். ஆனால் அது ஐபோன் சார்ஜர் என்பதால் புது போனையே வாங்கிவிடலாம் என்கிறார்கள்.. இதனால் தான் உங்கள் பொண்டாட்டியை மட்டும் எந்த காரணம் கொண்டு பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள். அதேநேரம் சிலர் அவசரப்பட்டுட்டியே குமாரு என்று கிண்டல் செய்து கமெண்ட் போட்டும் வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications