குசால் மெண்டிஸை மொத்தமா வாங்கிட்டீங்களேடா.. புலம்பும் சிஎஸ்கே ரசிகர்கள்.. தெறிக்கும் மும்பை மீம்ஸ்!
சென்னை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் வென்றதன் மூலமாக மும்பை அணி குவாலிஃபையர் 2வது போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், ஆட்டத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
ஆதி படத்தில் வில்லன் முன்னால் சென்று அமரும் விஜய் துப்பாக்கியை வைத்து, "இங்க பாரு.. முடிஞ்சா என்னைய கொன்னுடு.. இல்ல நான் உன்னைய முடிச்சிருவேன்" என்று ஆவேசமான மிரட்டுவார். அதில் வரும் வில்லனாக மும்பை அணியையும், விஜயாக சாய் சுதர்சனையும் மாற்றி, "இங்க பாரு.. முடிஞ்சா என்னுடைய விக்கெட்டை எடுத்திடு.. இல்ல நான் உன்னை முடிச்சிருவேன்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தக் லைஃப் மொமண்ட்.

பரிதாபங்கள் வீடியோ ஒன்றில் சுதாகர் தனது நண்பரிடம், "அதுதான் வாங்கிட்டீங்களே.." என்று புலம்புவார்.. அதனை குசால் மெண்டிஸ் கேட்ச் விட்டதையும் ஒப்பிட்டு, சிஎஸ்கே ரசிகராக சுதாகரை மாற்றி, "வாங்கிட்டீங்களாடா.. குஜராத் டீமையே விலை கொடுத்து வாங்கிட்டீங்களா" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அம்பானி இறங்கிட்டான் மாமா மொமண்ட்.

சார்பட்டா பரம்பரை படத்தில் கருப்பு எம்ஜிஆர் கெட்டப்பில் வரும் மாறன் ஆர்யாவை, "என்ன மாதிரி ஆட்டம்பா" என்று மாலை போட்டு பாராட்டுவார். அதில் வரும் மாறனாக ஹர்திக் பாண்டியாவையும், ஆர்யாவாக அஸ்வனி குமாரையும் மாற்றி, "என்னா மாதிரி ஆட்டம்பா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ரங்கன் வாத்தியார் சிஷ்யன்டா மொமண்ட்.

மீசைய முறுக்கு படத்தில் ஜூனியரை கலாய்க்கும் சீனியர், "டேய் உன்னைய கழுதை மாதிரி போக சொன்னேன்.. இப்படி டான்ஸ் ஆட சொல்லலை" என்று சொல்வார். அதில் சீனியராக ஆஷிஷ் நெஹ்ராவையும், ஜூனியராக குசால் மெண்டிஸையும் மாற்றி, "உன்னைய குஜராத் மாற்று வீரர் மாதிரி விளையாட சொன்னேன்.. மும்பை மாற்று வீரர் மாதிரி ஆட சொல்லலை" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஐயோ முடியலைடா சாமி மொமண்ட்.

திருப்பாச்சி படத்தில் விஜய் பட்டாசு பாலு முன்பாக, "ஈட்டியை எறிந்து என்னாடா குறி வைக்கிறான் உன் ஆளு.. குறினா இப்படி இருக்கணும்" என்று சொல்வார். அதனை அப்படியே விஜயாக சாய் சுதர்சனை மாற்றி, "என்னடா பேட்டிங் செய்றான் உன் ஆளு.. ஆட்டன்மா இப்படி இருக்கணும்" என்று 759 ரன்களை விளாசியதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் லியோவை பார்த்துட்டியா மொமண்ட்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications