"ப்ளூ ஜெர்சியை பார்த்தாலே நமநமனு இருக்குமோ" மும்பை பல்தான்ஸை வெளுக்கும் சிஎஸ்கே.. தெறிக்கும் மீம்ஸ்
ஜெய்ப்பூர்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதன் மூலமாக டாப் 2 இடங்களுக்குள் நிறைவு செய்வதை பஞ்சாப் அணி உறுதி செய்துள்ள நிலையில், சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.
மகாராஜா படத்தில் சிங்கம்புலியை பார்த்து நட்டி, "துரை மிரட்டுறீங்களோ.. செதச்சிருவேன்" என்று சொல்லுவார். அதனை அப்படியே சிங்கம்புலியாக மும்பை அணியையும், பஞ்சாப் அணியாக நட்டியையும் மாற்றி, "துரை எல்லாரையும் மிரட்டுவீங்களோ.. செதச்சிருவேன்" என்று மிரட்டி அடிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இடியையே இடிச்சிபுட்டாங்க மொமண்ட்.

மருதமலை படத்தில் இன்ஸ்பெக்டராக வரும் அர்ஜுனை பார்த்து வடிவேலு, "ஐயையோ.. என்ன கான்ஸ்டபிளாக போனவன்.. இன்ஸ்பெக்டராக வரான்" என்று மிரண்டு போவார்.. அதனை அப்படியே அர்ஜுனாக ஸ்ரேயாஸ் ஐயரையும், வடிவேலுவாக அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ நிர்வாகமாக மாற்றி, "ஐயையோ.. எந்த டீம்-க்கு போனாலும் பிளே ஆஃப் கூட்டிட்டு வந்துரான்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு.. அவரை காப்பாற்றணும் கர்த்தரு மொமண்ட்.

"பிரேக்கிங் பேட்" இணையத் தொடரில் நாயகன் ஒரு கட்டத்தில் தன் மனைவியிடம், "நான் ஒன்றும் ஆபத்தில் இல்லை.. நான்தான்டி அந்த ஆபத்து" என்று மாஸாக பேசுவார். அதனை அப்படியே சூர்யகுமார் யாதவ் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்ததற்கு மாற்றி, "I am not in peak, I am the peak" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ்.

ரஜினிமுருகன் படத்தில் ரூ.1 லட்சத்தை இழக்கும் சமுத்திரக்கனி, "கடைசில என்னிடமே ரூ.1 லட்சம் வாங்கிட்டீங்களடா.. என் பெயருக்கு பின்னால இருக்கிற ஏழரை உங்களை என்ன செய்யுதுனு பாருங்கடா" என்று சொல்வார்.. அதில் வரும் சமுத்திரக்கனியை ஹர்திக் பாண்டியாவாக மாற்றி, "குவாலிஃபையர் 1 ஆட வேண்டிய எங்களை எலிமினேட்டர் ஆட வச்சிட்டீங்களடா.. பிளே ஆஃப்-ல உங்களை என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஐயயோ அங்கிள் பயமா இருக்கு மொமண்ட்.

நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீரரான ஜோஷ் இங்கிலிஸ் 42 பந்துகளில் 73 ரன்களை விளாசி தள்ளுவார். பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார்.. இதனை மும்பை அணியின் ரசிகர் ஒருவர், "இந்த ஆஸ்திரேலியா காரங்களுக்கு ப்ளூ ஜெர்சியை பார்த்தாலே நம நமனு இருக்கும் போல" என்று கமெண்ட் செய்துள்ள மீம் அல்டிமேட் ரகம்.













Click it and Unblock the Notifications