For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டிங்க...மோடியின் இலங்கை பயணமும் நெட்டிசன்ஸ் ரியாக்சனும்

பிரதமர் மோடி இலங்கை செல்வதாக தமிழில் டிவிட்டியுள்ளது தொடர்பாக பதிவுகள் போட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

Google Oneindia Tamil News

டெல்லி பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இலங்கை செல்ல உள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். வெசாக் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் இணைந்து கொள்வேன் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இதனை வைத்து அவரது பக்கத்தில் இலங்கை பயணத்தின் போது ஈழத் தமிழர் மற்றும் மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச வேண்டும் என பலர் வலியுறுத்தியுள்ளனர். அதேநேரத்தில் தமிழகத்துக்கு எப்போ வருவீர்கள் என்றும் கேட்டுள்ளனர்.

மேலும் தமிழில் பிரதமர் மோடி ட்விட்டிருப்பதை சுட்டிக்காட்டி மைல் கற்களில் இந்தியில் எழுவதை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தப் பதிவுகளில் சில...

தாக்குதலை கண்டிக்கவும்

நீங்கள் மக்கள் மீது அக்கறை இருப்பவர் என்றால் மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து வரவும் என்கிறார் இந்த வலைஞர்..

தமிழில் டிவீட்டியமைக்கு நன்றி

தமிழில் டிவீட்டியமைக்கு நன்றி. அப்படியே தமிழ்நாட்டில் உள்ள மைல் கல்லில் ஹிந்தியில் மாற்றுவதை நிறுத்திக் கொண்டால் பெரிய நன்றி... என கூறுகிறார் இந்த நெட்டிசன்...

தமிழில் குருவி பறக்குது..

என்னப்பா... இந்தி இந்தின்னு சொன்னார்கள்... தமிழில் குறுவி பறக்குது... என்கிறார் இவர்...

பிழைப்புகள் என்னாவது?

தலைவா... நீங்க அங்குள்ள தமிழர்களுக்கு நம் அரசு செலவில் பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தினால், இங்குள்ள தமிழ் அரசியல்வாதி பிழைப்புகள் என்னாவது? என கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்...

தமிழ்ல போஸ்ட் பண்ணிருக்காரு..

அட என்னப்பா இது தமிழ்ல போஸ்ட் பண்ணிருக்காரு... என மோடி தமிழில் டிவிட்டியிருப்பது குறித்து கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்..

English summary
Prime Minister Modi tweeted in his page that he is going to Srilanka for two days. Modi tweeted in Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X