மொபைலுக்கு டெம்பர்கிளாஸ் மாத்த முடியாத அளவுக்கு.. பேங்க்ல பேலன்ஸ் இருக்குடா!
சென்னை : எப்போதும் மாதத்தில் 20 தேதிக்கு மேல் புலம்புபவர்கள், இந்த மாதம் இன்னமும் 15 தேதி கூட ஆகவில்லை, அதற்குள் கையில் காசில்லை என மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
பணம் தான் இங்கு எல்லோருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினை. அதிலும் விலைவாசி ஏறும் அளவிற்கு வருமானம் உயராமல் இருப்பதால், ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு மாதத்தையும் கடத்துவது என்பது எல்லோருக்குமே பெரிய கவலையாகத்தான் இருக்கிறது. பணக்காரர்களுக்கு லட்சங்களில் பணப்பிரச்சினை என்றால், நடுத்தர மக்களுக்கு ஆயிரங்களிலும், ஏழைகளுக்கு நூறுகளிலும் என பிரச்சினை இருக்கிறது.

அதிலும் இந்த மாதம், ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும், யூனிபார்ம் வாங்க வேண்டும், பள்ளிக்குத் தேவையான பொருட்கள் வாங்க வேண்டும் என்ற எக்ஸ்ட்ரா செலவுகள் வேறு இருக்கிறது. போதாதக்குறைக்கு வைகாசி மாத முகூர்த்தங்களுக்கு இப்போதே பத்திரிகைகள் குவிவதால், மொய் எழுத வேண்டிய கட்டாயங்கள் வேறு.
இப்படி எல்லாப் பக்கங்களில் இருந்தும் பணப்பிரச்சினை நெருக்கினால் பாவம், மக்கள் என்னதான் செய்வார்கள். மீம்ஸ் போட்டு கொஞ்சம் புலம்பிக் கொண்டே, சிரித்து தங்களைத் தாங்களே சமாதானப் படுத்திக் கொள்கிறார்கள் போலும். அதனால்தான் சமூகவலைதளப் பக்கங்களில் இதுபோன்ற மீம்ஸ்கள் தற்போது அதிகம் பகிரப்படுகின்றன.

"மொபைலுக்கு டெம்பர்கிளாஸ் மாத்த முடியாத அளவுக்கு.. பேங்க்ல பேலன்ஸ் இருக்குடா!" என்றும், "மாசம் 16,000 சம்பளம் வாங்குறேன்.. ஆனா இன்னும் எனக்கு பிடிச்ச அந்த ரிமோட் கண்ட்ரோல் காரை வாங்க முடியல!" என்றும் விதவிதமாக ஒவ்வொருவரும் தங்களது பிரச்சினைகளை மீம்ஸ்களில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications