‘மைசூர் பாக்’ நஹி... இனி ‘மைசூர் ஸ்ரீ’ போலோ!
சென்னை : மாதத்தின் 20 தேதிக்கு மேல், நம் மக்களுக்கு கையில் காசில்லாமல், மன அழுத்தம் தானாக வந்து ஒட்டிக் கொள்ளும். அந்தமாதிரி சந்தர்ப்பங்களில் மனதுக்கு இதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து தங்களைத் தாங்களே சாந்தப்படுத்திக் கொள்கிறார்கள் சமூகவலைதளப் பக்கங்களில்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல் ஒரு டயலாக் பேசுவார், 'அடுத்தவர்கள் நம்மை கிண்டல் செய்தால் அது நமக்கு அவமானம்.. நாமே நமக்கு அதை செய்து கொண்டால், நகைச்சுவையாக அதனைக் கடந்து விடலாம்' என. இந்தப் பார்முலாவைத்தான் நமது நெட்டிசன்களும் அடிக்கடிப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக கையில் பணமில்லாமல், அவமானப் படும் வேளைகளை, மனதிற்குள் வைத்து குமுறிக் கொண்டே இருக்காமல், அதனை மீம்ஸ்களாக்கி, தாமும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைத்து விடுகின்றனர்.

இப்போதும் அப்படித்தான், "நைட்டு ஆனா கரெக்ட்டா வந்துடுது.. முதல்ல இத கூட்டிப் போய் கள்ளிப்பால் ஊத்திக் கொல்லணும்!" என இரவில் தூக்கத்தைக் கெடுக்கும் மன அழுத்தத்தைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். கூடவே, இனிப்புகளில் உள்ள, 'பாக்' என்ற வார்த்தையை, 'ஸ்ரீ' என வியாபாரிகள் மாற்றி இருப்பதையும் தங்கள் ஸ்டைலில் மீம்ஸ்களாக்கியுள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications