Mumbai Rains: இவ்வளவு ரணகளத்திலும்.. இதுதான் மும்பை நிலை.. எப்படி வேலைக்கு போறோம் தெரியுமா? மீம்ஸ்
மும்பை: மும்பையில் பெய்த கனமழை காரணமாக ஒட்டுமொத்த நகரமே வெள்ளக்காடாக மாறி இருக்கிறது. ஏர்போர்ட், ரயில் நிலையங்கள் முதல் வீடுகள் வரை எங்கு பார்த்தாலும் கனமழை சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனிடையே மும்பை மழை காரணமாக மக்கள் அடையும் பாதிப்புகள் சோசியல் மீடியாவில் மீம்ஸாக வெளியாகி வருகிறது.
மும்பையில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. கடந்த 8 மணி நேரத்தில் மட்டும் 177 செமீ கனமழை பெய்திருக்கிறது. கடந்த 2 நாட்களாக இரவு, பகல் என்று பாராமல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் மூலமாக 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மும்பையில் மழை கொட்டி வருகிறது. சுரங்கப் பாதைகள் மழை நீரால் முழுமையாக மூழ்கி இருக்கின்றன.

ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் மழைநீர் அதிகளவில் சூழ்ந்திருப்பதால், பொதுமக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்து வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அறிவுறுத்தி இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மும்பை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
Mumbaikars going to office #MumbaiRains pic.twitter.com/cLVCDGbcD3
— Desi Bhayo (@desi_bhayo88) August 19, 2025
மும்பையில் பெய்து வரும் கனமழையால் நகரின் அனைத்து பகுதியும் வெள்ளக்காடாக மாறி இருக்கிறது. இதனால் மகாராஷ்டிரா அரசை விமர்சித்தும், மும்பையின் தற்போதைய நிலையையும் வைத்து சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் மீம்ஸை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மும்பையில் தற்போது வேலைக்கு செல்வோரின் நிலை என்று தெர்மாகோலில் படுத்துக்கொண்டு தண்ணீரில் மிதக்கும் இளைஞரை போல் மாறிவிட்டதாக புலம்பி வருகின்றனர்.
New service launched in Mumbai 😂 #MumbaiRains
— V🐧 (@Vtxt21) August 18, 2025
pic.twitter.com/gDIlVjyDPo
அதேபோல் மும்பையில் புதிய சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ள ஒருவர், கார் ஒன்று நீர் மூழ்கி கப்பலாக மாறும் சேவை தான் அது என்று ஒரு வீடியோவை இணைத்து கிண்டல் செய்துள்ளார்.
अगर बारिश ना आए इस देश में तो साला कचरा भी ना साफ हो
— Thandaitweets (@mohit_blogg) August 19, 2025
नाइजीरिया ,केन्या और बांग्लादेश जैसा म्युनिसिपल कॉर्पोरेशन
टैक्स यूरोपियन देश जैसा #MumbaiRains pic.twitter.com/ElJ4oJ9u4T
அதேபோல் மும்பையின் மழைநீருடன் கழிவுநீர் கலந்து நகரின் பல்வேறு பகுதிகளிலும் சூழ்ந்து வருகிறது. மழைநீரில் குப்பைகள் கலந்து மக்களுக்கு சுகாதார பிரச்சனைகளையும் உருவாக்கி வருகிறது. இதனை வீடியோவாக பதிவிட்டுள்ள ஒருவர், ஒரேயொரு மழைக்கே நகரில் சுகாதார பிரச்சனை வந்துவிட்டதாக விமர்சித்துள்ளார்.
அதேபோல் பிரபலமான தாஜ் ஹோட்டல் மற்றும் கேட் வே ஆஃப் இந்தியா முன்பாக மழைநீர் தேங்கி நிற்கும் காட்சிகள் வெளியாகி பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Visuals from outside Gateway of India and Hotel Taj Mahal Palace amid #MumbaiRains 🌧️🌊 pic.twitter.com/5chdPZC5C5
— Brand Leakage (@Brandleakage) August 19, 2025
அதேபோல் சில நேரங்களில் மும்பைவாசிகள் கடலை சென்று பார்ப்போம்.. சில நேரங்களில் கடல் மும்பைவாசிகளை வந்து சந்திக்கும்.. நாங்கள் எவ்வளவு அதிர்ஷ்டக்காரர்கள் என்று பதிவிட்டு, இரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
https://x.com/OzarkarVallabh/status/1957800448653480340
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications