நைட்டு தோசைக்கும் தொட்டுக்க முறுக்கு தானா? டேய் இன்னுமாடா அந்த தீபாவளி முறுக்கெல்லாம் தீர்ந்து போகல?
சென்னை : தீபாவளிக்குச் சுட்ட முறுக்கையும், அதிரசத்தையும் தான் இன்னமும் பல வீடுகளில் சாப்பிட தருகின்றனர் என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சமீபகாலமாக மக்களுக்கு விதவிதமாக உணவு சாப்பிடும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தெருவுக்கு நாலு விதவிதமான உணவகங்கள் கண்ணில் படுகின்றன. இப்படி காலையில் ஒரு மெனு, மதியம் வேறு மெனு, இரவிற்கு புதிதாக ஒரு மெனு என திட்டமிட்டுச் சாப்பிடும் நம்மவர்களிடம் போய், இன்னமும் தீபாவளி முறுக்கையும், அதிரசத்தையும் தட்டில் வைத்து நீட்டினால் சும்மா இருப்பார்களா? மீம்ஸ்களாக தங்கள் ஆதங்கங்களையெல்லாம் கொட்டித் தீர்த்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
தீபாவளி முடிந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும், இன்னமும் சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள முறுக்கைத் தருவதெல்லாம் ரொம்பவே டூமச் என்கின்றன இந்த மீம்ஸ்கள். அதிலும், 'சாப்பாட்டிற்குக்கூட ஓகே.. தோசைக்கெல்லாம் தொட்டுக்க முறுக்கு தராங்க சார்', என்பது மாதிரியான மீம்ஸ்கள்தான் அவர்கள் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் காட்டுவதாக உள்ளது.
இன்னும் தீராத அளவிற்கு அப்படி எவ்வளவுதான் செய்து வைத்துள்ளீர்கள் என மீம்ஸ்களின் வாயிலாக கேள்விகளைத் தொடுத்து வருகின்றனர். வீட்டில் நேரடியாக இதைக் கேட்டால், தோசைக்குத் தொட்டுக் கொள்ள முறுக்கு தருவதற்குப் பதிலாக, முறுக்குக்கு தொட்டுக் கொள்ள தோசையைக் குடுத்து விடுவார்களோ என்ற பயம் போலும். இது அவர்கள் முறுக்கு மீம்ஸ்களைப் பகிரும் விதத்தைப் பார்த்தாலே தெரிகிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான தீபாவளி ஸ்பெஷல் முறுக்கு, அதிரசங்களின் மீம்ஸ் தொகுப்பு உங்களுக்காக...






-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications