Memes: உன் கூட தாழம்பூ வாழப்பூனு டூயட் பாடின குஷ்புவே நாலு கட்சி தாவிடுச்சு.. ஆனால் அண்ணாமல!
சென்னை: உன் கூட தாழம்பூ, வாழப்பூனு டூயட் பாடின குஷ்புவே 4 கட்சி தாவிடுச்சு, ஆனால் நீ இன்னும் எழுச்சினு காத்துக்கிட்டிருக்கியே அண்ணாமலை என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு தெறிக்க விடுகிறார்கள்.
கடந்த 2010ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த குஷ்பு பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார்.
இதையடுத்து அங்கும் கருத்து மோதல் ஏற்பட்டதை அடுத்து அவர் பாஜகவில் நேற்றைய தினம் இணைந்தார். இதையடுத்து அவர் குறித்த மீம்ஸ்களும் இறக்கைக் கட்டி பறக்கின்றன.

வாழப்பூ
உன் கூட தாழம்பூ வாழப்பூனு டூயட் பாடின குஷ்புவே நாலு கட்சி தாவிடுச்சுப்பா.
ஆனா நீ இன்னும் எழுச்சினு காத்துக்கிட்டிருக்கியே அண்ணாமலை என்கிறார் வலைஞர்.

மானாட மயிலாட நிகழ்ச்சி
நமீதா, காயத்ரி ரகுராம், குஷ்பு...
கலா மாஸ்டரும் வந்துட்டா கமலாலயத்துல மானாட மயிலாட தான்... என்கிறார் இந்த வலைஞர்.

காலையில் பாஜகவில் குஷ்பு
ராத்திரி அந்த கட்சிய கழுவி கழுவி ஊத்திட்டு காலையில் அதே கட்சியில் இணைந்தார் என்னடா பித்தலாட்டம்

என்னப்பூ
கூடையில் என்ன பூ ? தாமரைப் பூ ! #குஷ்பு

ஆளுநர் பதவி
#அடேய்...Smiling face with open mouth and smiling eyesGrinning face with smiling eyesWinking face with tongue
"#தமிழிசை மேடம் போல #குஷ்பு விற்கும் எதாவது ஒரு மாநில ஆளுநர் பதவி கிடைத்தாலும் கிடைக்குமே ஒழிய, தமிழகத்தில் நின்று ஜெயித்து ஒரு MLA/MP ஆக ஆவதெல்லாம் பகல் கனவே? என்னா #டிசைன் அப்படி!#அவதானிப்பு
"கடைசிவரை #பிஜேபி யிலாவது இருங்க!"

புதிய கட்சி
மரியாதை இல்லைனு தோன்றியிருந்தால், தனிக்கட்சி ஆரம்பித்திருந்தால் கூட தமிழன் கொண்டாடி இருப்பான்!!












Click it and Unblock the Notifications