For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழாதடா செல்லம்... பெட்ரோல் விலை குறைஞ்சா அப்பா உன் சைக்கிள குடுப்பாருடா... நெட்டிசன்கள் கல கல

அழாதடா செல்லம்.. பெட்ரோல் விலை குறைந்தால் அப்பா உன் சைக்கிள கொடுப்பாருடா செல்லும் என்று பெட்ரோல் விலை உயர்வு குறித்து நெட்டிசன்கள் கருத்து.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வருவதால் அதுகுறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டதட்ட பெட்ரோலும் டீசலும் ஒரே விலைக்கு வந்துவிட்டது.

இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக நெட்டிசன்கள் கலகல மீம்ஸ்களை அள்ளி தெறித்துள்ளனர்.

2018-இல் இழு வண்டி பயணம்

2008-ஆம் ஆண்டு காரில் சென்றோம். 2018-ஆம் ஆண்டு எதில் செல்கிறோம் என்று பாருங்கள்.

விலை எல்லாம் ஏறல பாஸ்

சர்தார்ஜி காமெடி மாதிரி இப்போ trend பக்தாள்ஸ் காமெடி தான்..
நபர் 1: என்னப்பா பெட்ரோல் விலை ஏறிட்டே போகுது..
பக்தாள் 1: அதெல்லாம் பொய் பாஸ்.. நான் எப்பவுமே 50 ரூபாய்க்கு தான் பெட்ரோல் போடுவேன்.. எல்லா தடவையும் 50 ரூ தான் வாங்குறாங்க.. விலை எல்லாம் ஏறல பாஸ்..

பாருங்கள்

பெட்ரோல் டீசல் விலையுயர்வால் இவர் எப்படி செல்கிறார் பாருங்கள்.

வண்டிய குடு வாடகைய குடு

பெட்ரோல் விலை ரூ. 81 ஏன்னு கேட்டா சுட்டாலும் சுட்டுபுடுவானுக!
இன்னும் ஒரு வருஷத்துக்கு சைக்கிள்லியே போவ வேண்டிருக்கு அதுக்குள்ள நீ என்னாடானா வண்டிய குடு வாடகைய குடுனு போவியா...

இந்த பயணத்தை பாருங்கள்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை சமாளிக்க இப்படி ஒரு புதுமையான பயணத்தை பாருங்கள். இதுவரைக்கும் பஸ்ல போயிருப்பீங்க, ரயில்ல போயிருப்பீங்க... பிளைட்டில் போயிருப்பீங்க... ஆனா இந்த மாதிரி போயிருப்பீங்களா...

அவ்வ்வ்....

ரூ. 2000 கொடுத்தா, புள்ளைக்கு சொட்டு மருந்து கொடுப்பது போல் பெட்ரோல் போடுறாங்களே... அவ்வ்வ்....

 சைக்கிள்

சைக்கிள்

அழாதடா! செல்லம்.... பெட்ரோல் விலை குறைந்சதும் அப்பா உன் சைக்கிள தந்திருவாரு...

English summary
Petrol and Diesel prices going to touch the sky. Netisans shared their comments on that.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X