கருப்பு படத்துக்கு சிக்கல் என்று முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைக்கலாம்னு பார்த்தால்.. மீம்ஸ்
சென்னை: சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்திற்கு முதல் இரண்டு நாட்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு இன்று அனுமதி வழங்கி இருந்தது. இப்படத்திற்கான முன்பதிவுகள் இரண்டு நாட்கள் முன்பு தொடங்கியும் விட்டது. ஆனால் தற்போது வருமானபங்கீடு தொடர்பாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. இப்படத்தை திரையிட இருந்த திரையரங்குகள் படத்தை நேற்று அதிரடியாக நீக்கின. இன்று காலை வெளியாகவில்லை.. இந்த சூழலில் முதல்வர் விஜய்யின் ஜனநாயகனை தொடர்புப்படுத்தி மீம்ஸ் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள கருப்பு படத்தை, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளார். 2கே கிட்ஸ் இளைஞர்களுக்கு பிடித்த பின்னணி இசைபாடகரான சாய் அபயங்கர் கருப்பு படத்திற்கு இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கருப்பு திரைப்படம் என்று நீதிமன்ற வழக்கு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு த்ரில்லர் திரைப்படம் என்கிறார்கள். இதில் கடவுள் நம்பிக்கை குறித்த விவாதங்கள் இடம்பெற்று இருக்கிறதாம்.
கருப்பு படத்திற்கான சிறப்பு காட்சிகளை இன்று காலை திரையிட தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கி இருந்த. இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட இருந்த சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர் டீம் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பில் "தவிர்க்க முடியாத காரணங்களால் 'கருப்பு' திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு அனைவரிடமும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டது.
வருமானபங்கீடு தொடர்பாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. தெளிவாக சொல்வது என்றால், தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு இடையேயான வருமானம் யாருக்கு எவ்வளவு என்பதுதான் பிரச்சனையாகும். இதனிடையே நடிகர் சூர்யா இப்பிரச்சனையைத் தீர்க்க பெரிய தொகையைச் செலுத்த முன் வந்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், 'கருப்பு' திரைப்படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இது நடந்திருக்கக் கூடாது. திரைப்படம் பார்ப்பதே நம் துன்பங்களை மறக்கத்தான். ஆனால், படம் பார்க்க வருவதே துன்பமாக அமைந்துவிடக்கூடாது. நானும் இதை எதிர்பார்க்கவில்லை. கருப்பன் வரான் வழி மறிக்காதே என்றால் நிறைய பேர் மறித்துக்கொண்டிருக்கிறார்கள். கடவுள் நம்முடன் இருக்கிறார். படம் இன்று மாலை வெளியாகும் என நம்புகிறேன். உங்களுக்கெல்லாம் கண்டிப்பாக பிடிக்கும்." என கண்ணீருடன் பேசினார்.
இதனிடையே "கருப்பு படத்துக்கு சிக்கல் என்று முதல்வர் அய்யாவுக்கு கோரிக்கை வைக்கலாம்னு பாத்தா அவரு படமே 4 மாசமா சிக்கல்ல தான் இருக்கு " என நெட்டிசன் ஒருவர் மீம்ஸ் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. ஏனெனில் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாக வேண்டியது.
கடந்த ஐந்து மாதங்களாக சென்சார் பிரச்சனையில் வெளியாகவில்லை... அதேநேரம் திரைப்படம் தேர்தலுக்கு முன்பே சிலர் கசியவிட்டுவிட்டனர். இதனால் தயாரிப்பாளர் பெரிதும் பாதிக்கப்பட்டார். இப்படம் அனேகமாக இந்த மாதத்திற்குள் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. ஜனநாயகன் தான் முதல்வர் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் திரையரங்கில் போய் பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள்.
-
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா












Click it and Unblock the Notifications