இந்திய நாட்டின் மானத்தை ஒரு தமிழன் காத்தான்... தினேஷ் கார்த்திக்கை கொண்டாடும் ட்வீட்ஸ்!
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட தினேஷ் கார்த்திக்கிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Recommended Video

சென்னை : டி20 கிரிக்கெட்டில் பங்களாதேஷ் வெற்றி பெற்று பாம்பு டான்ஸ் ஆடும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிரடி திருப்பமாக தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்து வெற்றியை இந்திய அணிக்கு பறித்துக் கொடுத்தார். தினேஷ் கார்த்திக்கின் இந்த வெற்றியை கெத்து தமிழன்டா என்று கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் இடையேயான முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் இந்திய அணிகள் மோதின. 20 ஓவர்களில் பங்களாதேஷ் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி வெற்றிக்கு கடைசி நேரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் தினேஷ் கார்த்திக்.
8 பந்துகளில் 29 ரன்களை குவித்து டி20 தொடரை வென்று பாம்பு டான்ஸ் போட நினைத்த பங்களாதேஷ் அணி ரசிகர்களை கதற விட்டார். இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட தமிழன்டா என்று சமூக வலைதளங்களில் தினேஷ் கார்த்திக்கை கொண்டாடும் ரகளை ட்வீட்கள் தூள் பறக்கின்றன. அவற்றில் சில இதோ :
|
கெத்து தமிழன்டா
மேன் ஆஃப் தி மேட்ச் = தினேஷ் கார்த்திக்
மேன் ஆஃப் தி சிரியஸ் = வாஷிங்டன் சுந்தர்
தமிழன்டா... என்று மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் இந்த நெட்டிசன்.
|
கடைசி தமிழனின் ரத்த எழும்
இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி நேரத்தில் கைகொடுத்தார் தினேஷ் கார்த்திக். இதனை குறிப்பிட்டு கருத்து பதிவிட்டுள்ள இந்த நெட்டிசன், கடைசி தமிழனின் ரத்தம் எழும் வீழாதே என்று ட்வீட்டியுள்ளார்.
|
நாட்டின் மானத்தை காத்த தமிழன்
இந்திய நாட்டின் மானத்தை ஒரு தமிழன் காத்தான்.. என்று தினேஷ் கார்த்திக்கின் அபார வெற்றியை கொண்டாடுகிறார் இந்த வலைபதிவர்
|
தினேஷ் கார்த்தி பாம்பை பந்தாடிய போது
தினேஷ் கார்த்திக் பாம்பை பந்தாடிய போது எடுத்த படம் என்று இவர் ஒரு படத்தை ட்வீட்டியுள்ளார். சிங்கம் ஒன்று பாம்பை தன் காலில் போட்டு மிதித்து நிற்கும் கம்பீர புகைப்படத்தை இவர் பகிர்ந்துள்ளார்.
|
விஜய் சங்கர் எங்கே? தினேஷ் கார்த்திக் எங்கே?
ஒரு ஓவரை முழுசா சாப்பிட்ட விஜய் சங்கர் எங்கே. 8 பால்ல 29 அடிச்ச தினேஷ் கார்த்திக் எங்கே? என்று சூர்யவம்சம் ராதிகா ஸ்டைலில் கேட்டுள்ளார் இவர்.
|
கிராவுண்டுல டான்ஸ் ஆடுவ
பங்களாதேஷ் ரசிகர்கள் வெற்றிக்களிப்பில் ஆடிய பாம்பு டான்ஸை கிண்டல் செய்து இவர் ஒரு மீம் போட்டுள்ளார். இனிமே நீ கிரவுண்டுல டான்ஸ் ஆடுவ... என்று பாம்பு தலையில் தட்டும் போட்டோவை ட்வீட்டியுள்ளார் இவர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications