Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லை தமிழ் எப்பவும் மாஸ், வீரம் விளைஞ்ச மண்ணுலே! #Kaala teaser

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இது காலா டீசர் தானா வைரலாகும் வீடியோ

    சென்னை: காலா டீசரில் வேங்கை மகன் ஒத்தைல நிக்கேன் தில்லிருந்தா வாங்கலே என்று ரஜினி பேசும் செம மாஸ் நெல்லை தமிழ் டயலாக் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ரஜினியின் நெல்லைத்தமிழுக்கு டுவிட்டரில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

    'கபாலி' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி காந்த் நடித்திருக்கும் 'காலா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தனுஷின் வொண்டர்பார்ஸ் நிறுவனம் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். மும்பை தாதாவாக நடித்திருக்கும் ரஜினியின் நெல்லைத் தமிழ் டீசரில் பட்டையை கிளப்புகிறது.

    வேங்கை மகன் ஒத்தைல நிக்கேன் தில்லிருந்தா வாங்கலே என்று ரஜினி பேசும் ஒற்றை டயலாக்கிற்கே சிலாகிக்கின்றனர் ரசிகர்கள். டுவிட்டரில் காலாவின் நெல்லை தமிழ் குறித்து உலா வரும் சில குஷியான ரியாக்ஷன்ஸ் இதோ.

    காலரை தூக்கிவிட்டு சொல்வோம்

    வாடே தலைவா......விசில் எமோஜி எங்கடா. இவரு காலாடா, காலர தூக்கிவிட்டு சொல்லுவோம். தலைவா இந்த எர்த்துக்கே
    நீதான் கெத்து என்று ரகளை கிளப்புகிறார் இந்த வலைபதிவர்.

    மிரட்டும் பச்சைத் தமிழன்

    ஊர்க்காவலன் வேங்கையன். நெல்லை தமிழில் சொல்லை செயலாக்க பச்சை தமிழன் ரஜினிமிரட்டும் காலா கரிகாலன் வந்துவிட்டார் என்று டுவீட்டியுள்ளார் இவர்.

    வீரம் விளைஞ்ச மண்ணுலே

    நெல்லை தமிழ் எப்பவும் மாஸ். வீரம் விளைஞ்ச மண்ணுலே என்று டுவீட்டியுள்ளார் இவர்.

    கபாலி அளவுக்கு காலா இல்லை

    காலா டீசர் கபாலி அளவிற்கு இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது. காலா மொரட்டு ப்ளாப் ஆக போதுனு என்னோட ஏழாம் அறிவு சொல்லுது என்று டுவீட்டியுள்ளார் இவர்.

    மாஸ் ட்வீட்

    பம்பாயில் பாட்ஷா பேர சொன்னா அரபிக்கடல் மட்டும்தான் அலறும். அதே பம்பாயில் காலா பேர சொன்னா அகில உலகமே
    இப்போ அலறி அதிரும் என்று மாஸாக டுவீட்டியுள்ளார் இந்த நெட்டிசன்.

    நெல்லைத் தமிழ் எப்பவுமே மாஸ்

    நெல்லை தமிழ் எப்பவும் மாஸ், எங்க காலன் அத பேசும் போது பக்கா மாஸ். வீரம் விளைஞ்ச மண்ணுலே என்று ட்வீட்டியுள்ளார் இவர்.

    மாஸ் மசாலா படமா இருக்கும்

    கபாலி குமுதவல்லிய தேடப்போன கதையையும், கேங்ஸ்டர் பழிவாங்குற கதையையும் கலந்தடிச்சு குழப்பாம, காலா வில்லன் - ஹீரோ பூனை எலி விளையாட்டாக இருக்கும் என்பது தெளிவான மாஸ் மசாலா படமா இருக்கும்னு நினைக்கிறேன் என்று முன்கூட்டியே விமர்சனம் செய்துள்ளார் இவர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+