Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெசவாளர் குடும்பம் பெற்றெடுத்த 'பட்டு'.. ஆசிரியர் பகவானை கொண்டாடும் நெட்டிசன்கள்!

மாணவர்கள் மனதில் இடம் பிடித்த திருவள்ளூர் அரசுப் பள்ளி ஆசிரியர் பகவானை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கதறி அழுது விடைகொடுத்த மாணவர்கள்.. உருக்கமான வீடியோ

    சென்னை: மாணவர்கள் மனதில் இடம் பிடித்த திருவள்ளூர் அரசுப் பள்ளி ஆசிரியர் பகவானை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

    திருவள்ளூர் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதல் மாணவர்களின் பாசப்போராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆசிரியர்கள் மீது ஒரு புறம் பாலியல் குற்றச்சாட்டுகள் குவியும் நிலையில் அத்தனை மாணவர்களையும் தன் அன்பால் கட்டிப்போட்டுள்ளார் ஆசிரியர் பகவான்.

    இந்தக்காலத்தில் இப்படி ஒரு ஆசிரியரா என அனைவரும் வியக்கும்படி நடந்துகொண்ட ஆசிரியர் பகவானை பலரும் பாராட்டி வருகின்றனர். நெசவாளர் குடும்பத்தில் பிறந்து மாணவர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த ஆசிரியர் பகவானை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

    நற்பெயர் பெற்றுதந்த ஆசிரியர்

    சிறந்த ஆசிரியர் பகவான் அவர்களின் பணி இடமாற்றம் நிறுத்தி வைப்பு..!!
    களங்கப்பட்டு இருந்த ஆசிரியர் துறைக்கு நற்பெயரே பெற்று தந்த உயர் திரு. #பகவான் ஆசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த #வாழ்த்துகள்..!! பாராட்டுக்கள்..!!

    இறைவனுக்கும் முன்னவர்தானே

    தமிழக அளவில் மட்டும் அல்லாது தேசிய அளவில் பகவான் ஆசிரியரை பற்றிய பதிவுகள் தான். ஆசிரியர் பணியில் அர்ப்பணிப்பு அவரை இறை நிலைக்கு உயர்த்தி உள்ளது ஆசிரியர் என்றாலே இறைவனுக்கும் முன்னவர் தானே.

    அரசுப்பள்ளி ஆசிரியர் பகவான்

    யார் அந்த அரசு ஆசிரியர் பகவான்!!!

    உண்மையான குரு

    யார் யா? அந்த பகவான் ஆசிரியர்
    நானே அவரை பார்க்கனும் போல் இருக்கிறது.
    நிர்மலாதேவி போன்றோர் உலாவும்
    இந்த கல்வி சாலைகளில் பகவான் போன்றோருக்காக பள்ளியே கண்ணீர் விடுவது உண்மையான குருவிற்கு சமர்ப்பணம்......

    ஆசிரியர் ரூபத்தில்

    பகவான் இருக்காரு.. ஆசிரியர் ரூபத்தில்...நன்றி பகவான்... வாழ்க உம்புகழும் நீரும்..

    நல்லாசிரியர் பகவான்

    மாணவர்களுக்கு உண்மைச் சம்பவங்களையும் சொல்லி தீயவழிக்குப் போகாத வகையில் அறிவுரை வழங்குவேன் அதனால்தான் அவர்களும் என்னை ஓர் ஆசிரியராக பார்க்காமல் அண்ணன் போலவே பார்த்தார்கள்
    # திருவள்ளுவர் அருகே ஒரு பள்ளி ஆசிரியர் இடமாற்றத்தை தாங்க முடியாமல் அழுத மாணவர்கள்
    #இவரே நல்லாசிரியர் பகவான்

    குருபகவான்

    ஆசிரியர் பகவான் என்று அழைப்பவர்கள் குரு பகவான் என்றும் கூறலாம் தானே?

    அள்ளி கொடுத்திருக்கிறார்

    அரசு பள்ளிகளில் அரைகுறையாக பெயருக்கு பாடம் நடத்தும் பற்பல ஆசிரியர்கள் மத்தியில்.. மாணவர்களுக்கு நன்றாக பாடம் சொல்லிக் கொடுப்பது மட்டுமில்லாமல் பாசத்தையும் அள்ளிக் கொடுத்திருக்கிறாரே!

    இத்தகைய பேறு..

    திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர் பகவான் பணியிடை மாற்றம் ரத்து என்றவுடன் மாணவ குழந்தைகள் முகத்தில் அளவில்லா ஒரு மகிழ்ச்சி..
    பிறவி என்றால் இத்தகைய பேறு பெற்று இருக்க வேண்டும்...

    கண்கள் குளமாகிறது

    கல்வி அமைச்சர் மாண்புமிகு திரு செங்கோட்டையன் அவர்கள் ஆசிரியர் பகவான் அவர்களை திருவள்ளூர் வெள்ளியகரம்அதே பள்ளியில் பணியாற்ற தயவுசெய்து உதவி செய்யுமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன் !! கண்கள் குளமாகிறது..

    வாழ்த்துக்கள் வாத்தியாரே..

    எப்போதும் மாணவர்களுடன் அமர்ந்தே மதிய உணவருந்தும்
    வெளியகரம் பள்ளி ஆசிரியர் #பகவான்
    ஆசிரியர்
    #நண்பனாக இருந்தால் அந்த மாணவர்களுக்கு எப்படி பிரிய மனம் வரும்? வாழ்த்துக்கள்!!! #வாத்தியாரே

    சிறந்த உதாரணம்

    எங்களை விட்டு போகாதீங்க சார் என்று கதறி அழுத பள்ளி மாணவர்கள், பிரிய மனமில்லாமல் கதறி அழுத ஆசிரியர்.
    260 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் என்பதால் அரசாங்கத்தால் கட்டாய இடமாற்றம்.
    ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் இவர்.
    பெயர் #பகவான்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+