For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் தலைவனுக்கே அனுமதி இல்லையா? வைகோவுக்கு ஆதரவாக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விமான நிலையத்திலேயே மலேசிய அரசு தடுத்து நிறுத்தியதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: மலேசியா சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அந்நாட்டு அரசு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியது. இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிறந்த நாடாளுமன்றவாதி என்ற போற்றப்பட்டவரை, ஈழத்தமிழர்களுக்காக போராடுபவரை எப்படி மலேசிய அரசு உள்ளே நுழைய விடாமல் தடைவிதிக்கலாம் என கொதித்துள்ளனர். பலர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் வைகோவுக்கு உதவுமாறு டிவீட்டியுள்ளனர்.

நாட்டுக்கு ஆபத்தானவர்களை உள்ளே விட்டுவிட்டு நாட்டுப்பற்றுள்ள ஒருவரை தடுக்கிறீர்களே என கொந்தளித்துள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

அட பாவிங்களா..

அட பாவிங்களா... ஆபத்தானவனுங்கள உள்ள விட்டுட்டு நாட்டு பற்று உள்ள ஆள விட மாட்டிங்க...என்கிறார் இந்த நெட்டிசன்..

சத்தியத்துக்கு வந்த சோதனை

இது என்ன டா சத்தியத்துக்கு வந்த சோதனை...

சிங்கத்துகே அனுமதி இல்லையா

குருநாதா என்னாச்சு ! சிங்கத்துகே அனுமதி இல்லையா... எனக்கேட்கிறார் இந்த நெட்டிசன்..

தலைவனுக்கே..

என் தலைவனுக்கே அனுமதி இல்லையா? என்கிறார் இந்த நெட்டிசன்...

பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!

விசா வழங்கி அனுமதி வழங்கிய தூதரக அதிகாரிகள் வைகோவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! என்கிறார் இந்த நெட்டிசன்..

அவருக்கு உதவுங்கள்

சுஷ்மா சுவராஜ் மேடம் எங்கள் தமிழ்நாட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மலேசியாவில் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளளது. பலமணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அவருக்கு உதவுங்கள்.. என்கிறார் இந்த நெட்டிசன்

என்ன செய்யப்போகிறீர்கள்?

சுஷ்மா மேடம் புகழ்பெற்ற நம் நாடாளுமன்றவாதி வைகோ எந்த காரணமும் இன்றி மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.. என்ன செய்யப்போகிறீர்கள்?? என்கிறார் இந்த நெட்டிசன்..

English summary
Netizens condemns Malaysia govt for not allowing Vaiko into the country. They are asking Sushma swaraj to take action on that.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X